பயங்கரவாதி அல்ல நான்: கெஜ்ரிவால்

பயங்கரவாதி அல்ல நான்: கெஜ்ரிவால்

1 mins read
da719a71-d396-435e-9f72-d6c7b7a46814
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருந்து புதிய தகவல் ஒன்றை அவர் அனுப்பி உள்ளார்.

24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் தன்னை கண்காணிப்பதாக அந்தத் தகவலில் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், தினசரி என்ன செய்கிறேன் என்பதையும் குடும்பத்தினர் உடனான சந்திப்புகளைக் கூட அவர்கள் கண்காணிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “நான் ஒன்றும் பயங்கரவாதி இல்லை. சாதாரண மனிதன் தான்,” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், சிறையிலிருந்து கெஜ்ரிவால் அனுப்பிய தகவலை வாசித்துக் காட்டினார்.

“சிறையில் இருந்தாலும் கூட கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகவே உழைத்து வருகிறார். கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதை நான் வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று கூறி அதனை அவர் வாசிக்கத் தொடங்கினார்.

குறிப்புச் சொற்கள்