கெஜ்ரிவாலின் பிணை நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது நீதிமன்றம்

கெஜ்ரிவாலின் பிணை நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது நீதிமன்றம்

1 mins read
edf42f3e-8a02-4a57-861f-7769e39cba7e
பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் நகரில் கடந்த மே 26ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஐஏஎன்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளும் வகையில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஏழு நாள்கள் இடைக்கால பிணை வழங்கியது. அதன்படி அவர் ஜூன் 2ஆம் தேதி சரணடைந்து சிறைக்குச் செல்ல வேண்டும்.

சிறை வைக்கப்பட்டதால் தன் உடலின் எடை அளவுக்கு அதிகமாக குறைந்துள்ளது. அதனால் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தனக்கு மேலும் ஏழு நாள்கள் பிணை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு் செய்து, அதை அவசர மனுவாகக் கருதி விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தை நாடுவதற்கு அனுமதியளிப்பதாக கூறியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கையை வரைவதிலும், மதுபான உரிமங்களுக்கு ஈடாக லஞ்சம் பெறுவதிலும் டெல்லி முதல்வர் முக்கிய பங்கு வகித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டிவருகிறது. கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுவதற்காக ரூ.100 கோடியை ஆம்ஆத்மி பெற்றதாக அந்தத் துறை கூறியுள்ளது.

ஆனால், கெஜ்ரிவால் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். மேலும், ஆம்ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல் என்று சாடி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்