ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு

ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு

1 mins read
4b7e18aa-0261-45bb-a109-6431f6cf9a7d
‘அண்ணா கேண்டீன்’ உணவகத்தில் உணவின் தரத்தையும் ருசியையும் சாப்பிட்டு பார்த்துத் தெரிந்துகொள்ளும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.

இந்த உணவகத்தில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இங்கு தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு தரமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என ஆந்திர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என மேலும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்