காலையிலேயே மல்லுக்கட்டு!

ஊர்வன வகையைச் சேர்ந்த இரு விலங்குகள் சண்டையிடும் காணொளி இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இக்காணொளி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ‘ஐஐஎம்’ எனப்படும் இந்திய மேலாண்மைக் கழக வளாகத்தில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்த நந்தா இதனைத் தம் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பார்த்தவுடன் இவை முதலைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆனால், அவை முதலைகள் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர்  இப்பதிவிற்குக் கருத்து பதிவிட்டுட்டுள்ள சிலர்.

“பலரும் இவற்றை முதலைகள் என்று நினைக்கக்கூடும். ஆனால், இவை உடும்புகள். முற்றிலும் தீங்கில்லாதவை. பல பத்தாண்டுகளாக அக்கல்வி நிலைய வளாகத்தில் உள்ளன,” என்று அப்பதிவின்கீழ் கருத்திடும் பகுதியில் ஒருவர் எழுதியுள்ளார்.

இன்னொரு டுவிட்டர்வாசி, “இடத்திற்காக அல்லது பெண் உடும்பிற்காக இரு ஆண் உடும்புகள் மல்லுக்கட்டுகின்றன. இனப்பெருக்கம் செய்யும் ஆண்-பெண் உடும்புகள் இவ்வாறு சண்டையிட்டுக்கொள்ளாது. அவை தரையோடு ஒட்டியே இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!