You are here

இந்தியா

சின்னத்திரை நடிகை நிலானி காணவில்லை

சென்னை: சின்னத்திரை நடிகை நிலானி திடீரென மாயமானதால் பரபரப்பு நிலவி வருகிறது. அவர் எங்கு உள்ளார் எனப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித் குமாரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நிலானி தன் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைக ளுடன் சென்னையில் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் காந்தி லலித்குமாருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. தம்மைத் திருமணம் செய்து கொள்ளும்படி காந்தி லலித்குமார் வற்புறுத்துவதாகவும், தன்னை அடித்து உதைத்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு போலிசில் புகார் அளித்தார் நிலானி.

‘திமுகவில் தொண்டர்கள் தலைவராக முடியாது’

நெல்லை: திமுகவில் வாரிசு அர சியல் நடப்பதாக முதல்வர் எடப் பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாளையங் கோட்டை சென்ற அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவற்பு அளித்தனர். இதையடுத்து கட்சியினர் மத்தியில் பேசிய அவர், திமுகவில் சாதாரண தொண்டரால் தலைவ ராக முடியாது என்றார். அதிமுகவை அழிக்க வேண் டும் எனும் நோக்கத்துடன் தீய சக்திகள் செயல்பட்டுக் கொண்டி ருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், அத்தகையை சக்திகளுக்கு எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் என்றார்.

செங்கோட்டையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு

சென்னை: பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு செங்கோட்டை யில் எதிர்வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நெல்லை ஆட்சியர் பிறப்பித்துள் ளார். பதற்றம் நிலவும் பகுதிகளில் பொதுக்கூட்டம், போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் எந்த இடத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 540 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

உலகத் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வு மாநாடு

சென்னை: ‘லெமூரியா கண்டத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி’ குறித்த உலகத் தமிழறிஞர்கள் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் துவங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். குமரி- லெமூரியா உலக தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஓடி ஒளியவில்லை என்கிறார் நடிகர் கருணாஸ்

சென்னை: நடிகரும் எம்எல்ஏவு மான கருணாசை போலிசார் தேடி வருகின்றனர் என்றும் அவர் தலை மறைவாகிவிட்டார் என்றும் தகவல் வெளியான நிலையில் வீட்டில்தான் தங்கியுள்ளேன் என்று கருணாஸ் கூறியுள்ளார். “நான் எங்கும் ஓடி ஓளிய வில்லை. வளசரவாக்கம் வீட்டில் தான் தங்கியுள்ளேன்,” என்று கருணாஸ் தெரிவித்தார். கடந்த 16ஆம் தேதி நுங் கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்குத் தலைமை வகித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தியாக ராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனையும் அவ தூறாகப் பேசியதாகக் கூறப்படு கிறது.

‘ராஜீவ் காந்தியை நான் கொல்லவில்லை’

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தியை நான் கொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். “என்னுடைய சிறை வாழ்க் கையைச் சிதறடிக்க உதவுங்கள்,” என்றும் அந்தக் கடிதம் வழி சாந்தன் கோரிக்கை விடுத்துள் ளார்.

புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்; வருகிறது மாற்றம்

சென்னை: உயர்கல்வித் தேர்வு களில் புத்தகத்தைப் பார்த்து பதில் எழுதும் முறை உள்ளிட்ட புதிய மாற்றங்கள் இடம்பெறும். இதற்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய வல்லுநர்கள் குழுவை ஜூனில் மத்திய அரசு அமைத் தது. குழுவின் அறிக்கை தொடர்பில் கல்வியாளர்கள், மக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன. மாணவர்களின் கூர்ந்தாய்வு, செயல்முறை, உடனடி முடிவு எடுக்கும் ஆற்றல், ஆழ்ந்த ஆய் வறிவு என பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மொத்தம் 12 வகையான தேர்வு சீர்திருத்தங்களை அமல்படுத்த லாம் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாகன ஆய்வாளர் வங்கிப் பெட்டியில் 10 கிலோ தங்கம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய பாபு, 55, என்பவரின் பெட்டகத்தில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட் டதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டு உள்ளன. அதிகாரி பாபு, சில நாட்களுக்கு முன் வாகன தகுதிச் சான்று வாங் குவதற்காக ரூ.25,000 வாங்கிய தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலிசார் விசாரணை நடத்தி கடந்த 11ஆம் தேதி பாபுவையும் அவரது உதவி யாளர் செந்தில்குமாரையும் கைது செய்தனர்.

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

சென்னை: எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நேற்று திறந்துவைத்தார். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள ஜெ. சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீது தமிழகம் முழுவதும் சுமார் 265 வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 ஊழியர்களுடன் ரூ.97 லட்சத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலிசார் வழக்குப் பதிந்தனர். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். “நான் அடித்துவிடுவேன் என் பதால் என்னைக் கண்டு எடப்பாடி பழனிசாமி பயந்தார். கூவத்தூரை அடையாளம் காட்டியவனே நான் தான்,” என்று அவர் பேசினார்.

Pages