You are here

இந்தியா

நடிகர் சரவணனுக்கு எச்1என்1

சென்னை: தமிழகம் முழுவதும் எச்1என்1 காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ‘பருத்தி வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணனுக்கும் (வயது 50) எச்1என்1 காய்ச் சல் இருப்பது பரிசோதனை வழி தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், காய்ச்சல் குணமடைந்து பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கப்போவதாகவும் சரவணன் கூறி னார். இதற்கிடையே அவரது குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மந்திரங்கள் இல்லை; திருக்குறள் படிக்கச் சொல்லி திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியர்

அரியலூர்: திருக்குறளை வாசிக்கச் செய்து திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியருக்குப் பல்வேறு தரப்பின ரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ஜெ ய ங் கொ ண் ட த் தை ச் சேர்ந்த சக்திவேல் மத்திய அரசு ஊழியராவார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் அண்மை யில் திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கான ஏற்பாடு கள் நடந்துவந்த நிலையில் தமது இல்லற வாழ்க்கை திருக்குறளின் உதவியோடு தொடங்கவேண்டும் என விரும்பியுள்ளார் சக்திவேல். இதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த மணமகளின் குடும் பத்தாரும் திருக்குறள் மீது சக்திவேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக அவரது முடிவினை ஏற்றுக்கொண்டனர்.

பாஜக: தெலுங்கானா மக்களுக்கு இலவச பசு

ஹைதராபாத்: தெலுங்கானா மக் களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக விநி யோகிக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பரில் தெலுங்கானா மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை பேசிய பாஜகவின் தேர்தல் அறிக் கை குழுவின் தலைவர் என்.வி. எஸ்.எஸ். பிரபாகர், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கிராமங்களில் பண்டிகை உள்ளிட்ட காலங்களில் மக்கள் கோரும்போது அவர்களுக்கு இலவச பசுக்கள் விநி யோகிக்கப்படும் என்றார்.

தவறாக பொத்தானை அழுத்திய விமானி

புதுடெல்லி: டெல்லியிலிருந்து கண்டஹார் செல்லும் விமானத்தில் ஆபத்துக் கால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி விளக்கம் அளித்த விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், “விமானத்திலுள்ள “கடத்தல் தடுப்பு’ அவசரகால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் தேசிய பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கு தகவல் பறந்தது. தேசிய பாதுகாப்புப் படையின் அதிரடி வீரர்கள் அந்த விமானத்தைச் சுற்றி வளைத்தனர்,” என்று கூறினர். பின்னர் விமானியின் தவறு என்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் கண்ட ஹாருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அசாமில் 18 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்குப் பகுதி- யிலுள்ள அசாம் மாநிலத்தின் மருத்துவமனை ஒன்றில் அடுத்- தடுத்து 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழு- வதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநில ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 9 நாட்களில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரி விக் கின்றன. இந்தக் குழந்தைகள் அனைத்தும் பிறந்து ஓரிரு நாட்களே ஆனவை. இதனை அடுத்து, மருத்துவக் கல்வித் துறையின் இயக்குநர் தலை- மையில் விசாரணைக்கு சுகா தாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது போலி மருத்துவர்கள் கைது

அரியலூர்: போலி மருத்துவர்கள் 9 பேரை அரியலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஒன்பது பேரும் கைதாகினர். அம்மாவட்டத்தில் ஹோமியோபதி படித்தவர்கள் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டபோது போலி மருத்துவர்கள் பலர் சிக்கினர்.

தலைக்கவசம் விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்குவது தொடர்பில் தமிழக அரசின் கருத்து என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தலைக்கவசம் அணிவது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாலைகளில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கண்டித்து ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘நான்தான் தமிழக பாஜக தலைவர்’ என்று கூறியவரால் பெரும் பரபரப்பு

சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு, சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் நுழைய முயன்ற ஒருவரால் பரபரப்பு நிலவியது. கடலூரைச் சேர்ந்த நரேந்திர மாரி என்ற அந்நபர் நேற்று முன்தினம் காலை திடீரென பாஜக அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளர், நரேந்திர மாரி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலிசார் விரைந்து வந்து நடத்திய விசாரணைக்குப் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொண்ட நரேந்திர மாரி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை அருகே உருவாகிறது புதுப் புயல்

சென்னை: அந்தமான் கடற் பகுதியில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த சில தினங்களில் புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது. இந்தப் புயல் சின்னமானது சென்னையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அநேகமாக எதிர்வரும் 15ஆம் தேதி காலை இப்புயல் சென்னையை நெருங்கும் என்றும் அன்று மாலையே புதுவை நோக்கி நகர்ந்து அங்கு கரையைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள் ளதாக வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இரு பெண்களை கடத்தி, மிரட்டி, பலாத்காரம்: சாமியார் மீது புகார்

சென்னை: தொழிலதிபரது மனைவி, மகளைக் கடத்திச் சென்று சிறை வைத்ததுடன், பாலி யல் பலாத்காரத்துக்கும் உட்படுத்தி யதாக எழுந்துள்ள புகாரின் பேரில் சதுர்வேதி என்ற சாமியாருக்கு காவல்துறை வலைவீசி உள்ளது. சென்னையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட் டளை நடத்தி வந்த சதுர்வேதி, தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார். இவருக்கு ஏராளமான பக்தைகள் உள்ளனர். இவரது சொற்பொழிவுக்கும் ஆன்மீக உரைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Pages