You are here

இந்தியா

திருக்குறள் கற்பித்து கைதிகளை நல்வழிப்படுத்தும் சிறை அதிகாரி

உடுமலை: நாம், நம் குடும்பத்தினர், நம் உற்றார் உறவினர்கள் மட்டும் நன்றாகயிருக்கவேண்டும் என்று தான் சுயநலவாதிகளாய் பலரும் பல நேரங்களில் சிந்திப்பர். இவர்களில் இருந்து வித்தி யாசப்பட்டு விளங்குகிறார் ஒரு காவல் அதிகாரி. அவர் சிறைக்கைதிகள் பலருக் கும் திருக்குறளைப் போதித்து, அவர்களும் ஒரு நல்ல வாழ்க் கையை சிறப்பாக வாழவேண்டும் என்று பாடுபட்டு வருகிறார். தினமும் திருக்குறளை போதித்து சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தி வரும் உடுமலை கிளைச்சிறையின் சார்பு சிறை அலுவலரான அண்ணாதுரை, அதிபர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கஜா புயல் தீவிரம்; 4,400 இடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் உருவாகி யுள்ள கஜா புயல் மிகக் கடுமை யான புயலாக இருக்கும் என்றும் இது வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை செய்துள்ளது. கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வருவதை ஒட்டி தமிழ கத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வரும் இந்தக் கஜா புயல் காரணமாக சுமார் 4,400 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்ச ரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவம்பர் 22ல் பாஜக எதிர்ப்புக் கட்சிகள் கூடுகின்றன; நாயுடு மும்முர முயற்சி

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் தேதி புதுடெல்லியில் சந்திக்க இருக்கின்றன என்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார். புதுடெல்லி கூட்டத்தில் எல்லா கட்சி களுக்கும் பொதுவான அரசியல் தளம் வகுக்கப்படும் என்றும் எதிர்கால நட வடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

US$33 பில்லியன் அந்நிய முதலீட்டை திரட்ட தமிழக அரசு தீவிர முயற்சி

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஏழைகளுக்கு 500,000 வீடுகளைக் கட்டவும் தமிழக அரசு இஸ்லாமிய சுயாதிபத்திய நல நிதி மூலம் US$33 பில்லியன் முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. உலக இஸ்லாமிய பொருளியல் கருத் தரங்கு மற்றும் ஐக்கிய பொருளியல் அரங்கம் ஆகிய அமைப்புகளின் வர்த்தகச் சபை வட்டமேசை மாநாடு-2018, சனிக் கிழமை சென்னையில் நடந்தது. அதில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல் வம் உரையாற்றினார்.

மிரட்டும் ‘கஜா’ புயல்: கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென் றுள்ள மீனவர்கள் இன்று மாலைக் குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே இந்தப் புதிய புயலானது சென்னை நோக்கி நகர்வதாக வெளியான தகவல் காரணமாக சென்னைவாசிகளிடம் அச்சம் நிலவுகிறது.

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்திறங்கிய பயணிகள் வழக்கமான சுங்கச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரைச் சோதித்தபோது அவர் தனது உடலில் 120 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மலேசிய மணல் விற்றுத் தீர்கிறது: மேலும் ஒரு லட்சம் டன் இறக்குமதி

சென்னை: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலில் இதுவரை சுமார் 52 ஆயிரம் மெட்ரிக் டன் விற் பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலே சியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அம்மணலை விற்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. பின்னர் நீதி மன்ற உத்தரவின்படி அந்த மணல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 52,000 மெட்ரிக் டன் அளவிலான மணல் விற்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின் றன. இதற்கிடையே மலேசியாவில் இருந்து மேலும் 1 லட்சம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.

நடிகர் சரவணனுக்கு எச்1என்1

சென்னை: தமிழகம் முழுவதும் எச்1என்1 காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ‘பருத்தி வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணனுக்கும் (வயது 50) எச்1என்1 காய்ச் சல் இருப்பது பரிசோதனை வழி தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், காய்ச்சல் குணமடைந்து பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கப்போவதாகவும் சரவணன் கூறி னார். இதற்கிடையே அவரது குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மந்திரங்கள் இல்லை; திருக்குறள் படிக்கச் சொல்லி திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியர்

அரியலூர்: திருக்குறளை வாசிக்கச் செய்து திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியருக்குப் பல்வேறு தரப்பின ரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ஜெ ய ங் கொ ண் ட த் தை ச் சேர்ந்த சக்திவேல் மத்திய அரசு ஊழியராவார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் அண்மை யில் திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கான ஏற்பாடு கள் நடந்துவந்த நிலையில் தமது இல்லற வாழ்க்கை திருக்குறளின் உதவியோடு தொடங்கவேண்டும் என விரும்பியுள்ளார் சக்திவேல். இதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த மணமகளின் குடும் பத்தாரும் திருக்குறள் மீது சக்திவேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக அவரது முடிவினை ஏற்றுக்கொண்டனர்.

பாஜக: தெலுங்கானா மக்களுக்கு இலவச பசு

ஹைதராபாத்: தெலுங்கானா மக் களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக விநி யோகிக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பரில் தெலுங்கானா மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை பேசிய பாஜகவின் தேர்தல் அறிக் கை குழுவின் தலைவர் என்.வி. எஸ்.எஸ். பிரபாகர், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கிராமங்களில் பண்டிகை உள்ளிட்ட காலங்களில் மக்கள் கோரும்போது அவர்களுக்கு இலவச பசுக்கள் விநி யோகிக்கப்படும் என்றார்.

Pages