You are here

இந்தியா

அண்டை வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு ஏழாண்டு சிறை

தேனி: ஒரு சிறிய தகராற்றின்போது வாய்த்தகராறு முற்றி, பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு ஏழாண்டு சிறையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் தீர்ப்பளித்தார். தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிகாரி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான கோபால் என்பவருக் கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலை யில் அதிகாரியை கோபால் கீழே தள்ளிவிட்டுள்ளார். அப் போது தலையில் பலத்த காயமடைந்த அதிகாரி பலியானார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுக, அதிமுக பிரசாரம்

தேனி: தேனி மாவட்டத்தில் பெரிய குளம், ஆண்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பிர சாரத்தைத் தொடங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே சுவர் விளம்பரப் பிரசா ரங்களில் மும்முரமாக இவ்விரு கட்சிகளும் குதித்துள்ளதை அடுத்து, தேர்தல் தேதி வெளி யிட்டால் ஆண்டிப்பட்டி, பெரிய குளம் ஆகிய இருதொகுதிகளும் திருவிழாக்கோலத்தில் காட்சி யளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என இப் பகுதிவாழ் மக்கள் கூறியுள்ளனர்.

விவசாயிகள் பெயரில் வங்கித் தலைவர் ரூ.3.50 கோடி மோசடி

லால்குடி: திருச்சியில் விவசாயி கள் பெயரில் ரூ.3.50 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் வேளாண்மை கூட் டுறவு வங்கித் தலைவரை கண் டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி அருகே உள்ள காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ராமநாத புரம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த 3,900 விவசாயிகள் உறுப்பினர் களாக உள்ளனர். இந்தக் கடன் வங்கியின் தலைவராக சாலை சுந்தரம் கடந்த முறை பதவி வகித்துள்ளார். இவர் அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

16 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்களித்த கிராம மக்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு தெலுங்கானா வில் நடைபெற்ற முதல் வாக்குப் பதிவு இது. பூபல்பள்ளி மாவட்டம் பெனு கொலு என்ற மலைக் கிராமம் தெலுங்கானா-சட்டீஷ்கர் மாநில எல்லையில் உள்ளது. மாவோயிஸ் டுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கி.மீ. தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப் பட்டது.

காஷ்மீரில் பேருந்து புரண்டு விழுந்து 12 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் நகருக்கு அருகே ஒரு பேருந்து புரண்டு பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்ததாக நேற்றுத் தக வல்கள் தெரிவித்தன. காயம் அடைந்தவர்களில் பல ரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அந்தப் பேருந்து, லோரான் என்ற நகரில் இருந்து சென்று கொண்டிருந்ததாகவும் வழியில் மாண்டி பகுதியில் ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் சறுக்கிக்கொண்டு பேருந்து விழுந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்புப்பணி கள் தொடர்ந்தன.

தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு இறங்குமுகம்

புதுடெல்லி: ராஜஸ்தான், தெலுங் கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்களில் வாக்குகள் எதிர் வரும் 11ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், பல தரப்பு களிலிருந்தும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

விபத்தை தடுக்க கருவி கண்டுபிடிப்பு; தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள்

கிருஷ்ணகிரி: பேருந்துகளில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்வதைத் தடுக்கப் புதிய கருவியை வடிவமைத்துள்ள கிருஷ்ணகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோர் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றனர் (படம்: ஊடகம்).

உலகளாவிய ஆய்வு: அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது மூன்று தமிழக நகரங்கள்

திருச்சி: பொருளியலில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நகரங் களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய மூன்று தமிழக நகரங்களும் இடம்பிடித்து அசத்தி உள்ளன. உலகளவில் 2035ஆம் ஆண் டுக்குள் அதிக அளவில் பொரு ளியல் வளர்ச்சியடைய வாய்ப்புள்ள நகரங்கள் குறித்து ‘ஆக்ஸ் ஃபோர்ட் எகனாமிக்ஸ்’ என்ற உலகளாவிய பொருளியல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம் இப்போது அறிக்கையாக வெளி யிடப்பட்டுள்ளது. இப்போதைய வளர்ச்சி விகிதத் தின் அடிப்படையில் வருகின்ற 2035ம் ஆண்டுக்குள் அதிக பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது.

நடிகரைக் காணவில்லை என புகார்

சென்னை: ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’, ‘லத்திகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித் துள்ளார். நண்பரைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று ஜூலி கூறியுள்ளார்.

புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு இலவச மனை

சென்னை: நீர்நிலை, மேய்க்கால், சாலைகள் போன்ற புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்துவரும் ஏழை மக்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு தகுதியின் அடிப் படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தங்களுக்கு என்று எந்த ஒரு நிலமும் இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்க ளுக்கு 6 மாதங்களுக்குள் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Pages