You are here

இந்தியா

சாதனை அளவுக்குப் பயணம்

சென்னை: தீபாவளியை முன் னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக் கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 382,000 பேர் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து இம் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக் கிழமை 162,000 பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளனர். இவர்களில் 14,000 பேர் முன்பதிவு செய்தும், 148,000 பேர் முன்பதிவு செய்யாமலும் பயணித்துள்ளனர். நேற்றும் எங்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

‘இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுக ரூ. 4,000 கோடி திட்டம்’

ஆண்டிப்பட்டி: ஊழல் செய்த பணத்தில் தலா ரூ.200 கோடி வீதம் 20 தொகுதிகளுக்கும் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுக திட்டமிட்டு உள்ளதாகவும் ஆனால் மக்கள் செல்வாக்குடன் தங்களின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க தமிழ்செல்வன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசு நில விற்பனை மோசடி: போலி துணை ஆட்சியர் கைது

மதுரை: சிவகங்கையில் புறம் போக்கு நிலத்தை ரூ. 25,000க்கு விற்ற போலி துணை ஆட்சியர் அண்ணாதுரை, 71, என்பவர் கைது செய்யப்பட்டார். “அண்ணாதுரை சென்னை மயிலாப்பூரில் 2002ல் துணை தாசில்தாராக இருந்ததாகவும் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறுகிறார். துணை ஆட்சியர் எனக் கூறிக்கொண்டு அவர் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்குப் போலி முத்திரைகளை யும் அவர் தயாரித்துள்ளார். “பலரையும் அவர் ஏமாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. பாதிக் கப்பட்டோர் புகார் தெரிவிக்க லாம்,” என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2019ல் இந்தியா 5வது பெரிய பொருளியல் நாடு

புதுடெல்லி: இந்தியா, அடுத்த ஆண்டில் உலகின் 5வது ஆகப் பெரிய பொருளியல் நாடாக உரு வெடுக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம் பிக்கை தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னேறும் என்றும் அவர் கூறினார். புதுடெல்லியில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருண் ஜெட்லி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடு கள் பெரும் பொருளியல் நாடு கள் வரிசையில் இடம்பெற்று இருப்பதைச் சுட்டினார்.

பீகாரில் 400 பயிற்சி போலிசார் கலவரம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில் முகாம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகளாகப் பயற்சி பெற்று வரும் சுமார் 400 பேர் பெரும் கலவரத்தில் ஈடு பட்டு அதிகாரிகளைக் கண்ட படி தாக்கினார்கள். சவிதா பத்தாக், 22, என்ற சக பயிற்சியாளர் ஒருவருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டு இருந்ததாகவும் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்த அதிகாரி ஒருவர் அந்த நோயாளியைப் போக்குவரத்துப் பணியில் ஈடுபடுத்தியதாகவும் அதன் காரணமாக அந்தப் பயிற்சியாளர் மாண்டுவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைதிகளின் ரூ.8.77 லட்சத்தைச் சுருட்டிய சிறை ஊழியர்

சேலம்: சிறைத்துறை தணிக்கை அதிகாரிகள் சேலம் மத்திய சிறை யில் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். 2016 அக்டோ பர் முதல் 2018 ஜூலை வரையி லான காலக்கட்டத்திற்குரிய வரவு, செலவுகள் தணிக்கைக்கு உட் படுத்தப்பட்டன. இதில், கைதிகளுக்கு அவர் களின் உறவினர்கள் கொடுத்த தொகையில் ரூ.8.77 லட்சம் கையா டல் செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்தக் கணக்குவழக்குகளைக் கவனித்து வந்த சிறைத்துறை ஊழியர் வெற்றிவேல் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம், ஊழியர் வெற்றிவேல் கடந்த இருபது நாட்களாக வேலைக்கு வரவில்லை.

கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் சென்றதால் சென்னை யில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுவதை யொட்டி நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகரில் உள்ள பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றவண்ணம் உள்ளனர். சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோரின் வசதிக் காக தமிழக அரசு 11,367 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் போபர்ஸ் பீராங்கி ஊழல் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் ஸ்வீடனிலிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.1437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அரசியல் தலைவர்கள் பலருக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

‘மோடியின் ஊழலுக்கு ஆதாரம்’

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமானம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள காங் கிரஸ் தலைமையகத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய திரு ராகுல் காந்தி, டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தற்காப்பு நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அறுந்து தொங்கிய பாதத்தை ஒட்டவைத்து சாதனை

மும்பை: ஜுஹு பகுதியில் உள்ள ஆர்.என். கூப்பர் மருத்துவமனை யில் 27 வயது இணையர் ஒரு வரின் வெட்டப்பட்ட வலது பாதத்தை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் ஒட்டவைத்துள் ளனர். சுமார் 15 கிலோ எடையுள்ள கான்கிரீட் வெட்டும் இயந்திரம் குஞ்சா தாஸ் எனும் அந்த இளையரின் வலது பாதத்தின் மீது விழுந்தது. தாசின் வலது காலில் இருந்த ரத்த நாளங்கள், நரம்புகள், எலும்பு கள், தசைநாண் போன்றவை வெட்டுப்பட்டிருந்தன.

Pages