இந்தியா

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் வள்ளுவருக்கு காவி உடை, காவி உடை அணிய மறுத்து வெள்ளுடை அணிந்த வள்ளலாரை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேந்தவர் போல சித்தரிப்பது, திருப்பூர் குமரனுக்கு விபூதி பூசுவது என காவி பிரசாரத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த வரிசையில் அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் செய்தி ஊடகத்தின் சின்னத்தை காவி நிறத்தில் மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நான்காம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
மும்பை: மின்னிலக்க (பிட்காயின்) பண மோசடி தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரின் ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஒவ்வொரு வாக்கும் பாதுகாப்பாக இருக்கும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டடமாக மூன்று தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இம்மூன்று தொகுதிகளிலும் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.

கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.