கவிமாலையில் ‘அக்‌ஷை’ நூல் அறிமுகம்

கவிமாலையில் ‘அக்‌ஷை’ நூல் அறிமுகம்

1 mins read
1c7bffe3-5d84-4201-8d32-fa2754a76abc
கவிமாலையின் மாதாந்தரச் சந்திப்பில் பங்கேற்கும் கவிஞர்கள் தங்களது புதிய கவிதைகளை வாசித்து, கலந்துரையாட வாய்ப்புப் பெறுவர். - படம்: கவிமாலை
Google News Preferred Icon

கவிமாலை அமைப்பின் 310வது மாதாந்தர இலக்கியச் சந்திப்பு சனிக்கிழமை (மார் 28) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிகழ்வு தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சியில் கவிதைப் பகிர்வு, கவிதை வாசிப்பு மற்றும் பரிசீலனை, கவிதை நூல் அறிமுகம் போன்ற அங்கங்கள் இடம்பெறவுள்ளன.

‘கதை சொல்லும் கவிதைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் உரையாற்றவிருக்கிறார். ‘அக்‌ஷை’ நூல் அறிமுகம் இடம்பெறும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவிஞர்கள் தங்களது புதிய கவிதைகளை வாசித்து, கலந்துரையாடுவர்.

இளம்படைப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்