கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இளநீர்

கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் மிகச் சிறந்த ஓர் உணவுப்பொருள் இளநீர். கர்ப்ப காலத்தின்போது உடலில் நீர்ச்சத்தையும் ‘எலக்ட்ரோலைட்’ எனப்படும் மின்பகுளியின் அள வையும் தேவையான அளவு நீடிக்கச் செய்வதில் இளநீர் உதவுகிறது என கேரள மாநி லத்தின் தேங்காய் வளர்ச்சி வாரியம் கூறுகிறது.

“இளநீரில் மின்பகுளி, குளோ ரைடு, மெக்னீசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ‘சி’ ஆகியவை நிறைந்துள்ளன. அத்துடன், சர்க்கரை, சோடியம், புரதம் ஆகியவையும் குறிப்பிடத் தக்க அளவு இளநீரில் காணப் படுகின்றன,” என்று தெரிவிக்கப் பட்டது. முதல் மூன்று மாத காலத்தின் போது குமட்டல், மலச்சிக்கல் ஆகியவை வராமல் தடுத்து, நீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்கும் இளநீர், நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து, உடல் சோர்ந்து போகாமலும் பார்த்துக்கொள் கிறது.

“வயிற்றில் இருக்கும் குழந் தைக்குத் தேவையானவற்றைத் தொடர்ந்து அளிக்கும் வகையில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமான நீர்ச்சத்து தேவைப் படுகிறது. இளநீர் பருகுவதன் மூலம் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. மேலும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று களைத் தடுக்கவும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இளநீர் துணை செய்கிறது,” என்பது வாரியத்தின் கருத்து.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்