உடற்பருமனும் உடற்பயிற்சியும்

உங்களது தாத்தா, பாட்டி அல்லது பெற்றோர் குண்டாக இருப்பதால் நீங்களும் எடை கூடி குண்டாகி விடுவீர்களோ என்ற அச்சம் இருந் தால் அதிலிருந்து விடுபடுவதும் உங்கள் கைகளில்தான் இருக் கிறது. அன்றாட உடற்பயிற்சி அல்லது உடலுக்கு வேலைகொடுக்கும் வகையில் துடிப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் போதும். மரபுரீதியாக வரும் எடை அதி கரிப்பு அல்லது உடற்பருமன் பிரச் சினைகளைப் பெருமளவு குறைக் கலாம் என்கிறது புதிய ஆய்வு முடிவு.

உடற்பயிற்சிப் பழக்கம் ‘எஃப்டிஓ’ என்ற உடற்பருமனுக்குக் காரண மான மரபணுவால் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. “மரபுரீதியாக உடல் எடை அதிகரித்து குண்டாக இருப்போர் தங்களது நடவடிக்கைகளே அதில் இருந்து தம்மை விடுபடச் செய்யும் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் எங்களது ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

நமது உடற்பருமன் பிரச்சினை பாரம் பரியத்தால் மட்டும் வருவது இல்லை,” என்றார் கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய் வாளர்களில் ஒருவரான டேவிட் மேயர்.

Loading...
Load next