கிராமத்தினரின் தாகம் தீர்க்க பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்கும் வியாபாரி

பசியால் வாடுவோருக்கு உணவளித்து மகிழ்வதைப் போல தண்ணீர் தாகத்தால் தவிக்கும் தமது கிராமத்துக்கே தண்ணீர் தர கோடி கோடியாகச் செலவழிக்கிறார் நல்லெண்ணம் நிரம்பிய முதியவர் ஒருவர். இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய் யும் ஜேராம் தேசியா என்னும் அந்த 65 வயதுக்காரர் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இங்கோரலா என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த வர். அந்தக் கிராமத்தில் வளர்ந்து பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டா லும் இப்போது வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமது கிராமத்தைப் பற்றிய நினைவு அவருக்கு எப்போதும் உண்டு.

அந்தக் கிராமத்திற்குக் குடிநீர் வழங்கி வந்த தேபி ஆறு வற்றிப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டது. தண்ணீர் வராததால் அந்த ஆறு கொஞ்சம் கொஞ்சமாக மணலால் மூடப்பட்டு நடைபாதை ஆகிவிட்டது. இதனால் நூற்றுக் கணக்கான விவசாயிகள் பாதிக் கப்பட்டனர். வீட்டுக்கு வீடு நல்ல குடிநீர் கிடைக்காததால் ஒரு குடம் தண் ணீருக்குப் பல கிலோ மீட்டர் செல்லும் நிலைமை.

இந்த அவலநிலையைக் கண்டு வேதனையுற்ற ஜேராம், கிட்டத்தட்ட மண்ணுக்குள் புதைந்துவிட்ட தேபி ஆற்றை மீட்கும் பெரு முயற்சியில் இறங்கினார். மூன்று மாதங்களுக்கு முன் னால் தரையைத் துளைக்கும் பெரிய பெரிய இயந்திரங்கள் வந்து இறங்கின. ஆற்றைத் தோண்டி எடுக்கும் வேலைகள் தொடங்கி இரவுபகலாக நடந்தன. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் சொந்தப் பணத்தை இந்த நல்ல காரியத்துக்காக ஜேராம் செல வழித்து வருகிறார்.

Loading...
Load next