குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள்

குளிர்சாதனப் பெட்டியில் சில உணவுப் பொருட்கள் வைப்பதைத் தவிர்க்க வேண் டும். ஏனெனில், அந்த உணவுப்பொருட்கள் சில நேரங்களில் அழுகிவிடும் என்பதால் சமையலுக்குப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். வெங்காயம்/பூண்டு: பாலிதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தை வீட்டுக்கு கொண்டுவந்தபிறகு காற்றோட்டமாக வைக்க வேண்டும். வெங்காயம், பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை பூசணம் பிடிக்க அல்லது அழுகத் தொடங்கிவிடும் என் பதால் அவற்றை காற்றோட்ட மான சூழலில் வைக்க வேண் டும். பூண்டுகளைத் தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக் கிழங்கில் பச்சை வேர்கள், பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்கவேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்கவேண்டும். தேன்: உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவுப் பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். எனினும், தேனை குளிர்சாதனப் பெட்டி யில் வைக்கக்கூடாது. வாழைப்பழம்: வாழைப்பழத்தை குளிர் சாதனப்பெட்டியில் வைத்தால் அது விரைவில் கெட்டுப்போய் தோல் கருத்து விடும். இதேபோல் அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை