வர்த்தக ஆலோசனைப் பயிலரங்கு

ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை என்பதை விளக்கும் வர்த் தக ஆலோசனை கருத்தரங்குக்கு ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது. நாளை 4ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ரேஸ் கோர்ஸ் சாலை யில் உள்ள தி பனானா லீஃப் அப்போலா உணவகத்தின் இரண் டாம் மாடியில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

வர்த்தக, நிர்வாக ஆலோசனையாளர் திரு மு. ஹரிகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராக நிறுவனம் தொடங்குதல் குறித்து பயன்மிக்க விவரங்களை விளக்குவார். மேடை, தொலைக்காட்சி நாட கக் கலைஞர் திரு ஜேம்ஸ் குமார் நிகழ்ச்சியை வழி நடத்துவார். 16 வயதுக்கு மேற்பட்ட பெண் கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். ‘லிஷா’ உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்க ளுக்குக் கட்டணம் உண்டு. மேல் விவரங்களுக்கு 9632 0390 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்