புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்

பல்வேறு சர்ச்சைகள், முதற்கட்ட சோதனைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சமூக ஊடகத்தின் பிரத்தியேகச் சின்னமான ‘லைக்’ புதுப்பொலிவு காணவிருக்கிறது. ‘ரியாக்ஷன்ஸ்’ என்னும் புதிய ஆறு அம்சங்கள் ‘லைக்’ பொத்தானுடன் இணைக்கப்பட உள்ளதாக ‘புளூம்பெர்க் பிஸினஸ்’ தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ‘ரியாக்ஷன்ஸ்’ தொகுப்பில் ஒரு பதிவு குறித்து ஒருவர் தன்னுடைய மகிழ்ச்சியை, வருத்தத்தை, கோபத்தை, வியப்பை, பாராட்டை, சிரிப்பை வெளிப் படுத்தும் விதமாக ஆறு அம்சங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆறு அம்சங்களும் உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் உயிரோட்டமிக்கப் படங்களால் (animated images) பிரதிநிதிக்கப்படும். ‘லைக்’ பொத்தான் வசதி தொடர்ந்தாலும் குறிப்பிட்ட பதிவுக்கான தங்களது உணர்ச்சிகளைப் பயனாளர்கள் இனி துல்லியமாக வெளிப் படுத்த இயலும். அதே நேரத்தில், வெறும் ‘லைக்’ பொத்தானை மட்டும் அழுத்தும் வசதியும் நீடிக்கும். ‘லைக்’ பொத்தானை அழுத்தியவாறே இருந்தால் ‘ரியாக்ஷன்ஸ்’ தொகுப்பு தோன்றும். ஒரு பதிவு பிடித்திருக்கிறது என்பதைச் சொல்ல ‘லைக்’ வசதி இருப்பதுபோல பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட ‘டிஸ்லைக்’ வசதியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது பலரது வேண்டுகோள். ஆனால், அந்த யோசனையை ஃபேஸ்புக் நிராகரித்துவிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை