பில்லியன் பயனாளர்கள்

கைபேசி குறுஞ்செய்தி செயலியான ‘வாட்ஸ்அப்’பை மாதந் தோறும் ஒரு பில்லியன் (100 கோடி) பேர் பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தொடங்கப்பட்டு ஏழே ஆண்டுகளில் இந்த மைல் கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் செயலியை 22 பி. அமெரிக்க டாலர் விலைகொடுத்து வாங்கியது சமூக ஊடகமான ஃபேஸ்புக். அதன்பிறகு அந்தச் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்கானது. ஃபேஸ்புக்கில் மாதந்தோறும் 800 மி. பயனாளர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

உடனடி குறுஞ்செய்தி செயலி யான வாட்ஸ்அப் மூலம் நாள் தோறும் 42 பில்லியன் செய்திகள் பகிரப்படுகின்றன. அத்துடன், ஒரு நாளைக்கு 16 பில்லியன் புகைப்படங்களும் 250 மில்லியனுக் கும் அதிகமான காணொளிகளும் வாட்ஸ்அப் வழியாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மேலும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழுக்களும் (Group) அதில் உருவாக்கப்பட்டுள்ளன. உலகிலேயே ஆக அதிகமாக, இந்தியாவிலிருந்துதான் அதிக அளவு புகைப்படங்கள் வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படுகின்றன. வாட்ஸ்அப் செயலியை அதிகளவு பயன்படுத்தும் நாடுகளில் ஒன் றாக இந்தியா விளங்குகிறது.

அத்துடன், ‘வாட்ஸ்அப்’பில் அதிக அளவு குழுக்களை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவிற்கு இரண் டாமிடம் கிட்டியுள்ளது. மில்லியன் கணக்கானோர் ‘வாட்ஸ்அப்’பின் ஒலிவழி அழைப்பு (வாய்ஸ் கால்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் 57 பொறியியல் வல்லுநர்களை மட்டும் கொண்டு இப்படிப் பிரம்மாண்டமாக உருவெ டுத்து நிற்கிறது வாட்ஸ்அப். அதாவது, ‘வாட்ஸ்அப்’பில் பணி ஆற்றும் ஒரு பொறியாளர் சராசரி யாக 17.5 மில்லியன் பயனாளர் களுக்கு சேவையாற்றுகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்