நன்றி மட்டுமல்ல, அன்பும் மிக்கது!

எந்தச் செல்லப்பிராணி என்மீது அதிக அன்பு வைத்துள்ளது = நான் வளர்க்கும் நாயா? அல்லது பூனையா? இக்கேள்வி செல்லப் பிராணி களை வளர்க்கும் பெரும்பாலா னோருக்கு இருக்கலாம். அண்மைய ஆய்வு இதற்கு அறிவியல்ரீதியான விடையைத் தந்துள்ளது. அந்த ஆய்வில், பூனையைவிட நாய் ஐந்து மடங்கு அன்பை அதன் உரிமையாளர் மீது பொழி வதாகத் தெரிய வந்துள்ளது. ‘பூனைகளா? நாய்களா?’ எனும் பிபிசி ஆவணப்படத்திற் காக இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பத்துப் பூனைகளையும் பத்து நாய்களையும் அவர்களது உரி மையாளர்களுடன் பத்து நிமிடங் களுக்கு விளையாடவிட்டார் அமெரிக்க நரம்பியல் வல்லுநரான பால் ஸாக். அதற்கு முன்பாக, அந்தப் பிராணிகளின் உமிழ்நீர் மாதிரி களை அவர் சேகரித்துக்கொண் டார். பத்து நிமிட விளையாட்டிற்குப் பின் மீண்டும் அவற்றிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப் பட்டன.

அவற்றில், அன்பு அல்லது பிணைப்பிற்குக் காரணமான ‘ஆக்சிடோசின்’ ஹார்மோன் எவ்வளவு உள்ளது என்பதை அவர் சோதித்துப் பார்த்தார். உரிமையாளர்கள் தங்களது செல்ல நாயுடன் விளையாடும் போது அவை ஆக்சிடோசினைச் சுரக்கின்றன என்பது முன்னைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த திரு ஸாக், நாய்களின் உமிழ்நீரில் 57.2% ஆக்சிடோசின் இருந்ததைக் கண்டறிந்தார். மாறாக, பூனை களின் உமிழ்நீரில் 12% ஆக்சி டோசின் மட்டுமே இருந்தது. “நாய்கள் இவ்வளவு அதிக மாக ஆக்சிடோசினைச் சுரக்கும் என்பதை அறிந்து நான் வியப் படைந்தேன். 57.2% என்பது மிகவும் அதிகமான அன்பின் வெளிப்பாடு,” என்று திரு ஸாக் சொன்னதாக கேட்சேனல்.காம் அறிக்கை கூறுகிறது. படங்கள்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை