பட்டுப் பாதங்களுக்கு பெடிக்யூர் சிகிச்சை

பிள்ளைகள் விரும்பும் ப்ளூபெர்ரி ரொட்டி, பழத்தில் பொதிந்த கேக் கடைகளைத் தேடி நடையோ நடை என்று அலைவதும், சட்டைத் துணிகள், காற்சட்டைகளை எடுக்க ‘ஷாப்பிங் மால்’களில் ஏறி இறங்குவதும் பெண்களுக்கு சலிக்காமல் இருக்கலாம். ஆனால், பாதங்களுக்கு? இப்படி அளவுக்கு அதிகமாக உழைத்து களைப் படைந்துள்ள பாதங்களுக்கான ‘காஸ்மெடிக்’ சிகிச்சைதான் பெடிக்யூர். அழுக்கு, வெடிப்பு, சொரசொரப்பு நீக்கி, நகங்களுக்கு புத்துணர்வு அளித்து, கால் தசை களுக்கு ஓய்வு கொடுத்து, பட்டுப் போன்ற பாதங்களைப் பெறுவதற் கான ‘பெடிக்யூர்@ஹோம்’

செய்முறைகள் இங்கே... வாளியில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, அதில் இரு தேக்கரண்டி பேக்கிங் சோடா, கொஞ்சம் கைகழுவும் சோப்பு அல்லது ஷாம்பூ கலந்து நுரை வரும் வரை கலக்குங்கள். பாதங்கள் முழுக்க வாளிக்குள் மூழ்கியிருக்க 15 நிமிடங்கள் ஓய்வாக உட்காருங்கள். தசைகள் மிருதுவாகவும் நகக்கண்கள் மென்மையாகவும் அழுக்குகள் நீங்கவும் இது உதவும். பிறகு பாதங்களை வெளியே எடுத்து, பருத்தித் துணியால் ஒத்தடம் கொடுப்பதுபோல் தண் ணீரை ஒற்றி எடுங்கள். ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொரு நகக்கண் மீதும் விடுங்கள். இது நகங்களுக்கு சத்து கொடுப்பதோடு, ‘ஷேப்’ செய்ய ஏதுவாக நகங்களை மென்மையாக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்