சிறுகதை நூல் வெளியீடு

முஹைதீன் நிசார் அன்வரின் ‘காதல் சுழல்’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 13.2.2016 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். எட்டுச் சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு நூலாசிரியரின் ஐந்தாவது படைப்பாகும். “அனைவரும் சிரம-மின்றிப் படித்திடும் வகையில் எளிய நடையில் கதைகளை எழுதியுள்ளேன். இளையர்களும் மாணவர்களும் விரும்பி படிக்க வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு எனது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்,” என்றார் திரு முஹைதீன் (படத்தில் இடமிருந்து மூன்றாவது). செய்தி, படம்: முஹைதீன்