வசந்தத்தின் புதிய நிகழ்ச்சிகள்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

ஏப்ரல் முழு­வ­தும் ரசி­கர்­கள் இருக்கை­யில் அமர்ந்த­வாறு நிகழ்ச்­சி­களை ரசிக்க, வசந்தம் ஒளிவழி புதிய நிகழ்ச்­சி­களை அறி­மு­கம் செய்­துள்­ளது.

நிகழ்ச்சி: என்ன நடக்­குது?

ஆடல், பாடல், வித்­தி­யா­ச­மான மேடை படைப்­பு­கள், கேளிக்கை­யான விளை­யாட்­டு­கள் என குதூ­ க­லத்தைக் கிளப்­பி­விட ஆயத்­த­மாக உள்­ள­னர் நிகழ்ச்சி படைப்­பா­ளர்­க­ளான இள­மா­ற­னும் பார­தி­யும்.

ஒளி­ப­ரப்பு நேரம்: திங்கள் (இரவு 9 மணி)

நிகழ்ச்சி: 'சுவை சீசன் 3'

வெளி­நாட்டு உணவு வகை­களி­லி­ருந்து உள்ளூர் பதார்த்­தங்கள் வரை அனைத்தை­யும் எப்படி வீட்டில் சமைப்­பது என்பதை இந்­நி­கழ்ச்சி விளக்­கு­கிறது. விக்­கே­‌ஷும் லீனாவும் இணைந்து படைக்­கும் இந்­நி­கழ்ச்­சியை காணத் தவ­றா­தீர்­கள்.

ஒளி­ப­ரப்பு நேரம்: செவ்வாய் (இரவு 9 மணி)

நிகழ்ச்சி: நெஞ்­சுக்­குள்ளே

நெஞ்­சுக்­குள் புதைந்­தி­ருக்­கும் பாடல்­களை வெளிக்­கொ­ண­ரச் செய்­கிறது இந்­நி­கழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் ஓர் உள்ளூர் ஊடகப் பிர­ப­லம் தனக்கு பிடித்­த­மான பாடல்­களை பகிர்ந்­து­கொள்ள அதனை நேர­டி­யாக வாசித்து மலரும் நினை­வு­களுக்கு கொண்டுச் செல்ல ஒரு இசைக் குழு தயாராக இருக்­கும்.

ஒளி­ப­ரப்பு நேரம்: புதன் (இரவு 9.30 மணி)

நிகழ்ச்சி: 'கல்­யா­ணம் டேம்ஸ் அண்ட் கண்­டி­ஷன்ஸ் அப்­லாய்ஸ்' (நாடகம்)

துடிப்­பு­மிக்­க­வர், அனை­வ­ரு­ட­னும் சர­ள­மா­கப் பழ­கு­வ­தோடு தைரியம் மிக்­க­வ­ரா­க­வும் அஞ்சலி திகழ்­கிறார். இவர் அர்ஜுன் எனும் இயற்கை புகைப்­ப­டம் பிடிப்­ப­வரை காதல் செய்து திரு­ம­ணம் செய்­கிறார். இவர்­களின் இன்­ப­மான காதல் பய­ணத்தை­யும் தலை­வ­லியைக் கொடுக்­கும் திருமண வாழ்க்கையை­யும் இந்­நா­ட­கம் ஆராய்­கின்றது.

ஒளி­ப­ரப்பு நேரம்: திங்கள் முதல் வியாழன் வரை (இரவு 10 மணி)

நிகழ்ச்சி: 'வல்லமை தாராயோ' (நாடகத் தொடர்)

மகேஷ் ஒரு திறன்­மிக்க மருத்­து­வர், சந்தியா ஒரு கல­க­லப்­பான கலை ஆசி­ரி­யர். வாழ்க்கை­யின் பாதையில் இரு­வ­ரும் சந்­திக்­கின்ற­னர். மகே­‌ஷுக்கு பக்­க­ப­ல­மாக நல்ல வேலையிட குழு இருந்தா­லும் அவர் வேலை­யி­டத்­தில் அனு­ப­வித்த தோல்வி அவரை தொடர்ந்து ஆட்­டிப்­படைக்­கின்றது. எப்போது மகேஷ் வீழ்வார் என அவரின் போட்­டி­யா­ளர்­கள் காத்­தி­ருக்க, அவரின் தொழில் பாதிப்­படை­கிறது. மகே‌ஷின் குழு­வி­னர் அவரின் பெயரைக் காப்­பாற்­று­வார்­களா, சந்­தி­யா­வும் மகே‌ஷும் இணைந்து சவால்­களை எதிர்­கொள்­வார்­களா என்­ப­து­தான் கதை.

ஒளி­ப­ரப்பு நேரம்: திங்கள் முதல் வியாழன் வரை (இரவு 10.30 மணி)

நிகழ்ச்சி: 'சேட்டை த சீரிஸ்' (சிறுவர் நாடகத் தொடர்)

அக்­கம்பக்­கத்­தி­லும் பள்­ளி­யி­லும் நடக்­கும் சின்­னஞ்­சிறு பிரச்­சினை­களைக் கண்ட­றிந்து அதற்கு தகுந்த நட­வ­டிக்கை எடுத்து தீர்த்து வைக்­கின்ற­னர் 'சேட்டை' சிறு­வர்­கள். இது குற்றம் செய்­ப­வர்­களைப் பிடிப்­பது மட்டும் இல்லை, அதனை எவ்வாறு முறை­யா­கச் செய்வது என்பதை இந்த நகைச்­சுவைத் தொடர் விளக்­கு­கிறது.

ஒளி­ப­ரப்பு நேரம்: வெள்ளி (இரவு 8 மணி)

நிகழ்ச்சி: 'கதை­யல்ல வாழ்க்கை'

இந்திய சமூ­கத்­தி­னரைப் பாதிக்­கும் விஷ­யங்களை அலசி ஆராய்­கிறது இந்த 'கதை­யல்ல வாழ்க்கை' உரை­யா­டல் நிகழ்ச்சி. உண்மை வாழ்க்கைப் பிரச்­சினை­களை வெளி­க்காட்­டும் திரைப்­ ப­டங்கள் சில வெற்றிப் படங்க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளன. படைப்­பா­ளர் திரு முகம்­மது அலியின் படைப்­பில், இந்தத் திடைப்­ப­டங்கள் உணர்த்­தும் பண்­பு­நெ­றிகள் சில இன்னும் தீவிர­மா­கக் கலந்­துரை­யா­டப்­படும்.

ஒளி­ப­ரப்பு நேரம்: வியாழன் (இரவு 9 மணி)

நிகழ்ச்சி: தெரியாத தமிழ் சினிமா - திரை, இசை, பாடல்­கள்

தமிழ் மொழியின் அழகை நினை­வுப்­படும் பாடல் வரிகளை மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் புர­வ­லன் இந்த 1 மணி நேர நிகழ்ச்­சியைப் படைப்­பார்.

ஒளி­ப­ரப்பு நேரம்: ஞாயிறு (இரவு 7 மணி)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!