கண்ணபிரானின் எழுத்துப் பயணம்

வில்சன் சைலஸ்

பத்து வயது சிறுவனாக சிங்கப் பூருக்கு வந்ததிலிருந்து எழுது வதன் மீது ஏற்பட்ட பேரார்வம், அதற்கு முனைப்பாக அமைந்த காரணிகள் ஆகியவற்றுடன் எழுத்தாளனாக பரிணமித்த அனுபவங் களையும் பகிர்ந்துகொண்டார் 1998ஆம் ஆண்டில் உயரிய கலாசார விருது வென்ற பிரபல எழுத்தாளர் திரு இராம.கண்ணபிரான். சிங்கப்பூரின் முன்னோடி எழுத் தாளர்களில் ஒருவராகத் திகழும் இவரிடம் கேள்விகள் கேட்பதற்கும் கருத்துகளைப் பரிமாறிக்கொள் வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தேசிய நூலக வாரியத்தின் எழுத்தாளர் வரிசை நிகழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் எழுத்தா ளர்கள், வாசகர்கள் என உள்ளூர் வெளிநாடுடினர் பலர் பங்கேற்று திரு கண்ணபிரானுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

'எழுத்தும் பயணமும்' என்ற தலைப்பில் அமைந்த இந்நிகழ்ச்சி யில் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடக்கக் கல்லூரியில் பாடமாகச் சேர்ப்பது, குறைவான உள்ளூர் இளம் எழுத் தாளர்கள், தமிழ் வாசிப்பின் தற்போதைய நிலை போன்றவை குறித்த சுவாரசியமான கேள்வி களுக்கு நிதானமாகவும் தெளி வாகவும் பதிலளித்தார் திரு கண்ணபிரான். உள்ளூர் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, தாம் இளையராக இருந்த காலம் முதலே நீடித்துவரும் நிலைதான் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!