தமிழ்மணம் வீசிய கவிமணம்

வெள்ளிநிலா குணாளன்

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் பல நடைபெறவிருக்கும் வார இறுதியை வரவேற்கும் வண்ணம் முத்தமிழின் முத்தான இயலை கவிதை வாயிலாகப் பருகும் ஒரு வாய்ப்பை அளித்தது கவிமணம் 2016. கடந்த வெள்ளிக்கிழமை, சிங் கப்பூர் இந்தியர் சங்கத்தில் 'திரை வழி கவிமணம்' என்ற கவிதைப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடந்தேறியது. பன்முகப் படைப் பாளரான திரு ஏ.பி. ராமனை சிறப்பு விருந்தினராகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டின் போட்டி, திருக்குறளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் போட்டி சற்றே வேறு பட்டு திரைப்படப் பாடல் வரிகளை மையமாகக் கொண்டு அமைக்கப் பட்டிருந்தது. போட்டியில் பங்கெடுத்தவர் களுக்குச் சில பாடல் வரிகள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த வரிகளிலிருந்து ஏதாவது ஒன் றைத் தேர்ந்தெடுத்து அதைக் கொண்டு கவி கோர்க்க வேண்டும். அப்படி எழுதப்படும் கவிதைகளில் யாப்பிலக்கணத் தின் முறைகொண்டு மதிப்பீடு அளிக்கப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பங்கெடுத்த முப்பது பேரில் பன்னிரண்டு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களின் கவிதை களுக்குப் படைப்பாளர்கள் திரு சபா முத்து நடராஜனும் திருமதி கலைச்செல்வியும் உயிர் கொடுத் தனர். உயிர்பெற்ற கவிதைகளுக்கு உணர்வு சேர்த்தது திரு ராகவேந் திராவின் இனிய குழலிசை. கவிதைகள் ஒரு பக்கம் உருப்பெற, நிகழ்ச்சியின் உருவை அழகாக வடித்திருந்தார் திரு விஷ்ணு. கவிதைகள் வாசிக்கப்பட்ட வுடன் நீதிபதிகளான வெண்பா கவிஞர் ஏ.கே. வரதராஜு, ஆசி ரியை கல்பனா செல்வராசு, இசையமைப்பாளர் பரஸ் கல்யாண் ஆகியவர்களுக்கு வெற்றிக் கவி தையை தேர்ந்தெடுக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த இடைவேளையின்போது பிறமொழி கலப்பின்றி இலக்கண விதிமுறைகளை இணக்கமாகப் பின்பற்றி எழுதப்படும், பேசப்படும் தனித்தமிழ் பற்றி சிறிது கலந் துரையாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரும் இளையரான புல்லாங்குழல் கலைஞர் திரு ராகவேந்திரா, இந்த ஆண்டில் படைக்கப்பட்ட கவிதைகள் சற்றே இயல்பான தமிழில் புனையப்பட்டுப் புரிந்து கொள்ள சுலபமாக இருந்ததாகக் கூறினார்.

இதற்குப் போட்டியின் கருப் பொருளே காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்த திரு ராகவேந் திரா, இவ்வாறு இயல்பான தமிழில் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் கவிதை நிகழ்ச்சிகள் அமைந்தால் கவி மணம் போன்ற தரமான நிகழ்ச்சி களின் அரங்கைப் பார்வையாளர் கள் நிரப்புவர் என்று கருத்துரைத்தார்.

இரட்டையர்களான ராஜகோபாலன் தயாநிதியும் ராஜகோபாலன் கலாநிதியும் பள்ளிச் சீருடைகளில் போட்டிக்கு வந்திருந்தனர். முதல் ஆறு பரிசு பெற்றவர் களில் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவரான தயாநிதி மட்டுமே இளையர். தமிழ்மொழி விழாவை ஒட்டி நடத்தப்படும் இந்தக் கவிதைப் போட்டியைப் பற்றி இணையத்தளம் வாயிலாக தெரிந்துகொண்டு கவிதைகளைச் சமர்ப்பித்ததாக இவ்விரு சகோதரர்களும் கூறினர்.

பார்வையாளர்கள் அங்கத்தில் கவிதை வாசித்த பார்வையாளர் ஒருவர், போட்டியைப் பற்றி அறியா ததாலேயே கவிதை சமர்ப்பிக்க வில்லை என்பதையும் கூறியிருந் தார். தமிழ்மொழி மாத நிகழ்ச்சி களுக்கான விளம்பரங்கள், மக்க ளிடம் நிகழ்ச்சிகளைப் பற்றி தெரி யப்படுத்த எடுத்த அதே அளவு முயற்சிகள் நிகழ்ச்சிகளிலுள்ள போட்டிகளைப் பற்றி தெரியப் படுத்துவதிலும் இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் கவிதைகளும் செவிக்கு இன்பமளித்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியாளர்கள் நிச்சயம் உண்டு. போட்டியின் முடிவில் திரு ராஜு ராமய்யா முதல் பரிசையும், திரு கோவிந்தராஜன் இளங்கோவன் இரண்டாவது பரிசையும் திரு தியாக. ரமேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.

இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்ற கோ. இளங்கோவனிடம் (வலது) 600 வெள்ளி பரிசுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு ஏ.பி. ராமன். அவர்களுடன் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு வி.பி. ஜோதி. படம்: திரு தியாக. ரமேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!