மாணவர்கள் படைத்த கவிதை மாலை

தமிழ்மொழி விழா 2016ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத் தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), இம் மாதம் 24ஆம் தேதி அன்று உம றுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், 'விஜய்' தொலைக் காட்சியின் ‚'நீயா நானா' புகழ் திரு கோபிநாத் வழங்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற நிகழ்ச் சியை நடத்தியது. அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை எடுத்துச் செல்லவேண் டும் என்ற நோக்கத்தோடு, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இச்சங்கம் தமிழ்மொழியில் பயிற்சி யளித்து, மாணவர்கள் வழங்கும் 'கவிதை மாலை' என்ற புதிய அங்கமும் இளையர்களை ஈர்க்கும் வண்ணம் இடம்பெற்றது.

'மனதில் உறுதி வேண்டும்' என்ற தலைப்பில் திரு கோபிநாத் சிறப்புரையாற்றினார். எதிர்மறையான சிந்தனை களுக்கு எப்போதும் இடமளிக்கக் கூடாது என்றும் தமிழ்மொழியின் சிறப்புகளையும் தமிழர்களின் கலாசார, பண்பாட்டுப் பின்னணி களையும் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் வலியுறுத்தினார். தன்னம்பிக்கை என்பது நம்மிடமே இருக்கிறது; அதை நாம் சரியாக வெளிக்கொணர வேண் டும் என்றும் கடந்த காலக் கசப்பான நினைவுகளை முற்றிலும் களையவேண்டும் என்றும் அப்போதுதான் பிரகாசமான வாழ்வுக்கு அது வழிவகுக்கும் என்றும் நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் அவரது சொற் பொழிவு அமைந்திருந்தது.

கவிதை மாலை படைத்த பள்ளி மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் (நடுவில்). உடன் ஏற்பாட்டுக் குழுவினரும் முக்கிய பிரமுகர்களும். படம்: ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!