வேற்றுமையில் ஒற்றுமையே தமிழின் அழகு

வெள்­ளி­நிலா குணாளன்

தமிழ் மொழி விழாவை­யொட்டி சிங்கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்லிம் லீக், உம­றுப்­பு­ல­வர் கல்வி உதவி அறங்கா­வல் நிதி, உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நிலைப்­பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று உம­றுப்­பு­ல­வர் நினைவு அரங்கத்தை உம­றுப்­பு­ல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில் படைத்­தன. 2013லிருந்து நிகழ்ந்து வரும் உம­றுப்­பு­ல­வர் நினைவு அரங்கம் இந்த ஆண்டு சில பாகங்க­ளாக படைக்­கப்­பட்­டது. வீட்டில் தமிழ் பேசா­த­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச் சினை­களைச் சித்­தி­ரிக்­கும் ஒரு குறு­நா­ட­கம் முதலில் அரங்­கேறியது.

மூன்று தலை­முறை­யி­னர் சேர்ந்து மேடை­யேற்­றிய பெருமை அந்த நாட­கத்தைச் சேரும். அதைத் தொடர்ந்து திரு சாமு வேல் துரை­சிங்கம், திரு நா. ஆண்­டி­யப்­பன், திரு ப.நா.சம் சுதீன், திரு ஜோதி மாணிக்கவாசகம் ஆகி­யோ­ருக்கு 'அ. நா.மெய்தீன்' விரு­த­ளிக்­கப்­பட்­டது.

'உம­றுப்­பு­ல­வர்' விருது பல் லாண்டு காலமாக சிறப்­பான வகையில் தமிழ்த் தொண்டாற்றி வரும் முன்னாள் நியமன நாடாளு மன்ற உறுப்­பி­ன­ரான திரு ஆர். தின­க­ர­னுக்கு வழங்கப்­பட்­டது. நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தின ராக வந்­தி­ருந்த நாடா­ளு­மன்ற நாயகர் திரு­வாட்டி ஹலிமா யாக்கோப் தனது உரையின் போது, 44 நிகழ்ச்­சி­களை வெற்­றிக­ர­மாக ஏற்பாடு செய்­தி­ருந்த தமிழ் மொழி விழா ஏற்­பாட்­டுக் குழு­விற்கு தனது வாழ்த்­து­களை­யும் பாராட்டுகளையும் தெரி­வித்­தார்.

மொழி என்பது பண்­பாட்­டுக்­கும் கலா­சா­ரத்­திற்­கு­மான பால மாக அமை­கின்றது. தமிழ்ச் சமூ­கத்தை மட்­டு­மல்ல; மலாய் சமு­கத் தை­யும் சார்ந்த இக்­கா­லத்து இளையர்களிடையே நாளி­தழ்­கள் படிக்­கும் பழக்­கம் குறைந்து வரு­கின்றது. காலத்­திற்­கேற்ப மொழியை இளையர்­களிடையே கொண்டு சேர்க்க சமூக வலைத்­த­ளங்களும் இணையமும் உறு­துணை­யாக இருப்பதாகவும் திரு­வாட்டி ஹலிமா கூறினார்.

சிறப்­புப் பேச்­சா­ள­ரான வழக்­கறிஞரும் மலேசிய வானொலி தொலைக்­காட்­சிப் படைப்­பா­ளருமான திரு சி பாண்­டி­துரை 'தமி ழோடு வாழும் தமிழ் முஸ்­லிம்­கள்' என்ற தலைப்­பில் நகைச்­சுவை ­யும் யதார்த்­த­மும் நிறைந்த ஒரு சுவாரசி­ய­மான சொற்­பொ­ழிவை ஆற்­றினார். தமிழ்த்­தொண்டை­யும் தமிழ் மணத்தை­யும் உல­கெங்­கும் பரவ உழைத்த தமிழ் முஸ்லிம் கவிஞர்களை பற்றிய ஆர்­வத்தை தூண்டும் வகையில் பேசிய திரு பாண்­டித்­துரை முஸ்லிம், கிறிஸ் தவர், இந்து என்ற பேதம் மறைந்து தமிழ் நெறி என்ற ஒன்றே தமிழர்களின் கலாசார அடை­யா­ள­மாக உள்ளதை வலி­யு­றுத்தி தன் கருத்­து­களை ஆதா­ரத்­து­டன் பார் வையா­ளர்­களி­டம் சமர்ப்­பித்­தார்.

நாரைக் கொண்டு மல்லிகை, முல்லை, கன­காம்ப­ரம் என்ற கதம் பத்தைக் கட்­டும்­போது அந்த நாரே இப்­பூக்­களை இணைக்­கும் ஒரு கரு­வி­யாக உள்ளது. அதே போல்தான் முஸ்லிம், கிறிஸ்­த­வர், இந்து என்று வேறு­பட்­டி­ருக்­கும் மக்களை தமிழ்­மொழி என்ற கருவி இணைக்­கின்றது என்ற அழகான உதா­ர­ணத்தை முன் வைத்­தி­ருந்தார் பேச்­சா­ளர். தமிழ் என்பது வட்­டா­ரத்­திற்கு வட்­டா­ரம் வேறு­பட்­டுள்ள ஒரு மொழி. அதன் அழகே அந்த வேற்­றுமை­யி­லுள்ள ஒற்­றுமையே. ஆதலால் ஒருவர் பேசும் தமிழ் வேறு­பட்­டி­ருந்தால் அதனைக் கேலி பேசாமல் உற்­சா­கப்­படுத்த வேண்டும் என்றார் அவர்.

தமிழர் நெறியைப்­பற்றி விளக்கு கையில் பொது­மறை­யான திருக்குறளும் மாணிக்­க­வா­ச­கர் கூறியதும் நபிகள் நாய­கத்­தின் சொல்லுக்குமிடை­யே­யான ஒற்­றுமை­களை சில எடுத்­துக்­காட்­டு­களின் வழி விளக்­கினார். தொழுவது என்பது பொதுவாக இறைவனை வணங்­கு­வதைக் குறிக்­கும் தூய தமிழ்ச் சொல் என்றும் தமிழ் முஸ்­லிம்­கள் தங்கள் தந்தை­யரை அழைக்­கப் பயன் படுத்­தும் அத்தா என்ற சொல்லும் தேவா­ரத்­தில் பயன்­படுத்­தப்­பட்டு உள்ள பழந்த­மிழ்ச் சொல்லே என்றும் கூறினார்.

வீட்டில் பிள்ளை­களி­டம் தமிழ் பேச­வேண்­டிய அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய பேச்­சா­ளர், பிள்ளைகள் தமிழை அரை­குறை­யாகப் பேசினா­லும் அதை ரசித்து மேலும் சிறப் ­பா­கப் பேச ஊக்­கு­விக்க வேண் டுமே தவிர அவர்­களை ஏளனப்­படுத்­தக்­கூ­டாது என்றும் கூறினார்.

'உமறுப் புலவர்' விருதைப் பெற்ற முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர். தினகரன் (வலமிருந்து 6வது), சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், விருது பெற்ற இதர சமூகத் தலைவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினரான திருவாட்டி ஹலிமா யாக்கோப்
(இடமிருந்து 2வது). படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!