சிங்கையில் ‘தெய்வ மகள்’

சுதாஸகி ராமன்

சன் தொலைக்காட்சியில் ஈராண் டுகளுக்கு முன் தொடங்கிய 'தெய்வ மகள்' நெடுந்தொடர் நாடகம் பலரது மனங்களைக் கவர்ந்து உள்ளது. சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இந்த நாடகம் பலரால் பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நாடகத்தின் படப்பிடிப்புக்கு சிறிது நாட்கள் இடைவேளை வழங்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இதில் நடித்து வரும் நடிகர்கள் சிலர், சிங்கப்பூர் ரசிகர்களைக் கண்டு அவர்களுடன் நேரம் செலவிட கடல்தாண்டி இங்கு வந்திருக்கின்றனர்.

ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியில் 'சிங்டெல்' நிறுவனத்தால் இன்று ஏற்பாடு செய்யப்படும் சாலைக்காட்சியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இவர்கள் ரசிகர்களைச் சந்திப்பார் கள். இந்நிகழ்ச்சியில் சத்யப்பிரியா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன், இந்த நாடகத் தொடர் அளித்த அனுபவத்தைத் தமக்குக் கிடைத்துள்ள பாக்கியமாக வர்ணிக்கிறார். "முன்பு சில நாடகங்களில் நடித்திருந்போதிலும் 'தெய்வ மகள்' நாடகத்தில்தான் நடிப்பது எப்படி என்பதை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இனி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்ந் தெடுத்து நடிக்கும் தன்னம்பிக்கை எனக்குப் பிறந்துள்ளது," என்றார் அவர்.

எஸ். குமரன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நாடகத்தில் சத்யப்பிரியா கதாபாத்திரம் பல மாற்றங்களைக் கண்டு வந்துள் ளதாக வாணி பகிர்ந்துகொண் டார். ஏறத்தாழ 900 காட்சிகளில் சத்யப்பிரியாவாக நடித்து வரும் வாணி, தம் கதாபாத்திரத் திடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டதாகச் சொன்னார். அந்தக் கதாபாத்திரத்தைப் போலவே தாமும் தற்போது வாழ்க்கையில் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்கும் அணுகுமுறையைக் கையாள்வதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!