காத்திருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு திட்டம்

­­­நாம் தமிழில் பேசு­வ­ன­வற்றை உட­ன­டி­யாக வேறு 9 மொழி­களில் மொழி­பெ­யர்த்­துத் தரக்­கூ­டிய 'உடனடி ஒலி மொழி பெயர்ப் ­புச் சாதனம்' உரு­வாக்­கும் முயற்சி நடைபெற்று வருவது பலரும் அறிந்ததே. ஏ-ஸ்டார் ஆய்வு நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­படும் இந்தப் பணியில் தமிழ்­மொ­ழியை­யும் சேர்த்­துக்­கொள்­வதற்­கான ஏற்­பாடு­களைச் செய்­த­து­டன் அந்த முயற்­சி­யில் முழு­மூச்­சாக இயங்கி வரு­கிறார் தமிழ்­மொழி ஆர்­வ­லர் திரு மு. மெய்­யப்­பன். இந்த முயற்­சி­யில் இதுவரை உரு­வாக்­கப்­பட்­டுள்ள மென்­ பொ­ருள் நாம் பேசுவதை அப் ­ப­டியே தமிழ்­மொ­ழி­யில் திரையில் காட்­டு­கிறது. கல்வி, வர்த்­த­கம் போன்ற பல துறை­களில் தமிழ் ­மொழி தங்கு தடை­யின்றி பல நாடு­களுக்­கும் உலா வர வழி­வ­குக்­க­வுள்ள இந்தச் செயலியை உரு­வாக்­கு­வதற்­கான பணிகள் நிதிப் பற்­றாக் ­குறை­யால் தடை பட்­டுள்­ளன. பணி­ தொ­டர ஆவன செய்யும் வகையில் தமிழ்­மொழி கற்றல் மேம்பாட்­டுக் குழு, ஏ=ஸ்டாரின் மனித மொழி ஆராய்ச்­சிக் குழுவை சென்ற ஜனவரி மாதம் ஏழாம் தேதி சந்­தித்து ஆலோசனை நடத்தியது.

இம்­மா­தம் முழு­வ­தும் கொண்டா­டப்­பட்ட தமிழ்­மொழி விழா நிகழ்­வுக்­கான பணி­களில் கவனம் செலுத்­தி­ய­தால் இவ்விரு தரப்­பு­களுக்­கிடையே அடுத்த சந்­திப்பு உட­ன­டி­யாக நிக­ழவில்லை. மீண்டும் இவ்விரு தரப்­புகளும் சந்­தித்து உரையாடி, அர­சாங்கத் ­தி­ட­மி­ருந்து நிதி உதவி பெற்றுத் தரு­வதற்­கான பரிந்­துரை­யா­னது வர்த்­தக, தொழில் அமைச்­சர் (தொழில்) எஸ் ஈஸ்­வ­ர­னி­டம் விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்ப்­ப­தாக திரு மெய்­யப்­பன் கூறினார். இதற்­கிடையே, லீ குவான் இயூ இருமொழிக் கொள்கை நிதி உதவித் திட்­டத்­தி­லி­ருந்­தும் உதவி பெற முயற்­சி­கள் மேற்­ கொள்­ளப்­படு­கின்றன. என்­றே­னும் ஒரு நாள் இந்தத் திட்­டத்­தின் பணிகள் இனிதே நிறை­வுற்று உடனடி மொழி பெயர்ப்­புச் சாதனம் தமி­ழர்­களின் பயன்­பாட்­டிற்கு வரும் என்று நம்­பு­வ­தா­க­ திரு மெய்யப்பன் சொன் னார். இந்தத் திட்டம் குறித்த மேல் விவரங்களுக்கு திரு மு. மெய்யப்பனை 96166961 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

உடனடி ஒலி தமிழ் மொழிபெயர்ப்புச் சாதன உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க ஆவன செய்யும் வகையில் ஏ-ஸ்டாரின் மனித மொழி நுணுக்க ஆய்வுப் பிரிவும் தமிழ்மொழி கற்றல் மேம்பாட்டுக் குழுவும் இவ்வாண்டு ஜனவரியில் கலந்தாலோசித்தன. இந்தத் திட்டத்தில் தமிழ் மொழியை இணைப்பதற்கான பெரும் முயற்சிகள் மேற்கொண்டு முழுமூச்சாக இயங்கி வரும் மு. மெய்யப்பன் (இடமிருந்து மூன்றாவது), ஏ-ஸ்டாரின் மனித மொழி நுணுக்க ஆய்வுப் பிரிவின் தலைவர் டாக்டர் லீ ஹாய் ச்சோ (வலக்கோடி). படம்: ஏ-ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!