சிறுவர்களுக்கான போட்டிகள்

தாம்சன் சமூக மன்றத்தில் “கலைச்செல்வங்கள்” எனும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி இம்மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி ஒன்பதிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது. பாலர் வகுப்பு மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி, தொடக்கநிலை ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாட்டுப் போட்டி, தொடக்கநிலை நான்கிலிருந்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டி, கணிதப் புதிர்ப் போட்டி ஆகியவை நடக்கவிருக்கின்றன.

இப்போட்டிகளில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் 62516344 என்ற தொலைபேசி எண்ணில் தாம்சன் சமூக மன்றத்துடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு அழைக்கப் படுகின்றனர். வீட்டிற்கு அருகில் உள்ள சமூக மன்றங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019