மகுடம் சூடிய ‘மகாராணி’

ப. பாலசுப்பிரமணியம்

ஜொலிக்கும் புடவைகள் அணிந்து அதற்கேற்ப கண்கவர் அணிகலன்களையும் போட்டு தாய்மார்கள் ஆரவாரமாக ‘ஆர்க் கிட் கண்ட்ரி கிளப்’ பில் நேற்றுப் பிற்பகல் வந்து நின்றனர். அங்கு அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒலி 96.8 வானொலி நிலையம் ஏற்பாடு செய்த ‘ராணி மகாராணி’ நிகழ்ச்சி யைக் கண்டு களிக்க கிட்டத்தட்ட 800 பேர் தங்களது அன்னையருடன் வந்திருந்தனர். ‘ஒலி’ படைப்பாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொண்டது நிகழ்ச்சிக்குத் திரண்டு வந்த ரசிகர் கூட்டம்.

நிகழ்ச்சியில் ‘ஒலி’ படைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நகைச்சுவை நாடகப் படைப்பையும் வழங்கினர். உணவு அருந்திக் கொண்டே உள்ளூர், வெளிநாட்டுக் கலை ஞர்களின் மேடைப் படைப்புகளை ரசித்தவாறு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் பொழுதைக் கழித்தனர். ஷபீர், இளமாறன், சுதா‌ஷினி, விஷ்ணு பாலாஜி ஆகிய உள்ளூர் பிரபகலங்கள் மனதில் நீங்காத பழைய, புதிய பாடல்களைப் பாடி நினைவலைகளை அலையவிட, ‘சூப்பர் சிங்கர்ஸ்’ புகழ் சத்திய பிரகாஷ், அல்கா அஜித் ஆகியோர் தங்கள் குரல் வளத்தால் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தனர்.

‘ராணி மகாராணி’யின் பிரதான அங்கமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த 10 தாய்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர். அதன் முதல் சுற்றில் அவர்கள் ஒரு தமிழ்ப் பாடலுக்கு அழகாகப் பவணி வந்தனர். அவர்களில் ஐவர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். அந்தச் சுற்றில் ஓர் அழகு சாதனப் பொருளுக்கு அவர்கள் தங்கள் சொந்த பாணியில் விளம்பரம் செய்தனர். ‘ஒலி’ படைப்பாளர்கள் விமலாவும் ஆனந்தும் சேர்ந்து போட்டியாளர்களைக் கேலி செய்ய, பார்வையாளர்கள் மத்தி யிலிருந்து சிரிப்பொலி கேட்டது.

போட்டியில் வெற்றி பெற்று ‘ராணி மகாராணி’ கிரீடத்தைத் தட்டிச் சென்றார் சிங்கப்பூர் பொது மருத்துவ மனையின் தாதியருக்கான நிர்வாகி திருமதி சுசிலா சந்திரசேகரன். இம்மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் இவருக்குக் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. “எல்லா தாய்மார்களுக்கும் பல சிரமங்கள் இருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்துக் கடவுளை வழிபட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். இதுவே அனைத்து அன்னையருக்கும் நான் சொல்ல விரும்பு கிறேன்,” என்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான திருமதி சுசிலா, 49, தெரிவித்தார்.

‘ராணி மகாராணி’ பட்டம் வென்ற திருமதி சுசிலா. படம்: மீடியாகார்ப்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019