புனிதா ஆறுமுகத்தின் இசை அரங்கேற்றம்

குமாரி புனிதா ஆறுமுகத்தின் 11 00 சில நேரங்களில் கர்நாடக இசை அரங்கேற்றம் இம்மாதம் 8ஆம் தேதி மாலை சிங்கப்பூர் அரசாங்கச் சேவை மன்றத்தில் நடைபெற்றது. தம்முடைய ஆறாவது வயது முதல் முறைப்படி திருமதி விஜயம் பாலகிருஷ்ண சர்மாவிடம், இசை பயின்று வரும் குமாரி புனிதா, தம்முடைய ஆசிரியைக்கும் பெற் றோரான ஆறுமுகம் ரேவதி தம் பதிகளுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாகப் பாடினார். புனிதா பாடிய பாடல்களுக்கு இசைப் பின்னணி வழங்கியவர் கள்:- வயலின்- திரு ஆதித்ய சத்ய நாராயணன், மிருதங்கம்-திரு ரமணன் திருச்சிற்றம்பலம், கடம்- திரு பாஸ்கரன் ஸ்ரீகரம். சம்பிரதாயப்படி வர்ணம், கௌளை ராகத்தில் மகா கண பதிம், பஞ்சரத்ன கீர்த்தனையில் ஒன்றான சாதிஞ்சனே ஆகியவற்றிற்குப் பின்னர் அனைத்தும் தமிழ்ப் பாடல்களே.

திருமுறைகளில் ஆர்வமுள்ள புனிதாவின் கச்சேரியில் தமிழ்ப் பாடல்கள் மிக அதிக அளவில் அமைந்திருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. அருள்மிகு தர்ம முனீஸ்வரன் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் திரு சுப்பிரமணியமும் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கருணாநிதியும் குமாரி புனிதாவை வாழ்த்திப் பரிசளித் தனர்.

தமது இசை ஆசிரியை திருமதி விஜயம் பாலகிருஷ்ண சர்மாவுடன் குமாரி புனிதா ஆறுமுகம். படம்: புனிதா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019