சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி: - நூல் வெளியீடு

முனைவர் இரா­ஜிக்­கண்­ணு­வின் 'சிங்கப்­பூ­ரில் தமிழ்க்­கல்வி - வர­லாற்று நோக்கில் (1950 - 2009)' என்னும் நூல் வெளி­யீட்டு விழா இம்­மா­தம் 7ஆம் தேதி சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உண­வ­கத்­தின் மேல் தளத்­தில் நடை­பெற்­றது. சிறப்பு விருந்­தி­ன­ரான உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய இயக்­கு­நர் இரா. அன்­ப­ரசு நூல் வெளி­யீட்­டினைக் காணொளி வாயி­லா­கத் தொடங்கி வைத்தார். தலைமை­யுரை ஆற்றிய 'சிம்' பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்த்­துறைத் தலைவர் முனைவர் க. சண்­மு­கம், உள்­ளூர்ப் பிரச்­சினை­களை மைய­மா­கக் கொண்டு ஆய்­வு­கள் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டார். தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்­துறையைச் சேர்ந்த முனைவர் சீதா­லட்­சுமி நூல் ஆய்­வினை மேற்­கொண்டார். நூல் ஆசி­ரி­ய­ரின் கடின உழைப்பினைத் தம் உரையில் பாராட்­டினார். நூலினை வாங்க விழைவோர் 98007979 என்னும் எண்ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் இரா. அன்பரசுவிடம் இருந்து தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிரவேலு (இடது) நூலைப் பெற்றுக் கொண்டார். உடன் முனைவர் இராஜிக்கண்ணு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!