மனோவியல் பிரச்சினைக்கு உதவும் நூல்

தமிழவேல்

டாக்டர் சீதா சுப்பையா கடந்த 20 ஆண்டுகளாக யாருமில்லாத சூழலிலும் குரல்கள் கேட்டு, காட்சிகள் தென்பட்டு, தாமாகவே ஒரு கற்பனை உலகில் இருக்கும் சிறார்கள் பலருக்கு மனோவியல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். எனினும் 12 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த ஒரு சிறுமி டாக்டர் சீதாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி னாள். அவள் ஏன் துன்பச் சூழ் நிலையில் இருந்தாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சிறு வயது முதல் அவள் பல தகாத செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதால் ஆறு வயது முதல் அச்சிறுமி மனோவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததால் பல மருந்துகள் கொடுக்கப்பட்டன. வாழ் நாள் முழுவதும் மருந்துகளை உட் கொள்ள வேண்டிய நிலை.

குரல்கள் கேட்கும் பிரச்சி னையை அக்கால கட்டத்தில் மனோவியல் பிரச்சினை என பொதுப்படையாக வரையறுத்து அதற்கு மருந்துகள் கொடுப்பது மட்டுமே வழக்கம். அச்சிறுமி மற்றவருடன் பேசுவது இல்லை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் இல்லை. அவள் ஒரு ‘நடைப்பிணம்’ போல் தான் இருந்தாள். டாக்டர் சீதா கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிகிச் சைக்குப் பிறகு எந்தவித பாதிப்பும் இன்றி ஆடிப்பாடி, கல்வியிலும் சிறந்து விளங்கும் வழக்கமான ஒரு சிறுமியாக அவள் மாறினாள். மருந்துகள் தேவைப்படவில்லை.

அப்போதைய நிலையில் குரல் கள் கேட்கும் பிரச்சினைக்கு எந்த சிகிச்சை முறையும் வரையறுக்கப் படவில்லை, அது பற்றிய விழிப் புணர்ச்சியும் இல்லை. அதன் பொருட்டு தாமே சில சிகிச்சை முறைகளையும் குறிப்புகளையும் எழுதி அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். அவரது குறிப்புகள் பற்றி அறிந்து மேலும் பல மனோ வியல் நிபுணர்கள் தங்களிடம் வரும் சிறார்களுக்கும் டாக்டர் சீதாவின் சிகிச்சை முறையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019