இரத்தின வேங்கடேசனின் இலக்கிய உரை

ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற் குழுவுடன் இணைந்து மாதந் தோறும் நடத்தப்படும் கவிமாலை நிகழ்வு, இன்று இரவு 7 மணிக்கு லாவண்டர் எம்ஆர்டி யை ஒட்டியுள்ள ஜாலான் புசார் சமூக மன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கமான கவிமாலை நிகழ்வுடன் முனைவர் இரத்தின வேங்கடேசன் “ஏலாதி” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். பதினெண் கீழ்க்கணக்கு இலக்கியமான அதன் சிறப்பு, பண்பு சொல்லி கவிஞர்களுக்கு அறி முகப்படுத்தவுள்ளார்.

இம்மாதப் போட்டிக் கவிதைத் தலைப்பு ‘தனிமை’. தேர்வு செய்யப்படும் பிறமொழி கலப் பில்லாத எட்டு வரிகளுக்குக் குறையாத சிறந்த மரபுக் கவிதை ஒன்றுக்கு $50 பரிசு, முதல் பரிசாக ஒரு $50 பரிசு, இரண்டாம் பரிசுகளாக மூன்று $30 பரிசுகள், மூன்றாம் பரிசுகளாக மூன்று $20 பரிசுகள் உண்டு. வடித்த, பிடித்த கவிதைகளை அரங்கேற்றி மகிழ லாம். கவிமாலையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அதே இடத்தில் நடைபெறுவதால் உறுப் பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அழைக்கப்படுகி றார்கள். தகவலுக்கு 90053043 அல்லது 85960076 ஆகிய எண்களை அழைக்கலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சிங்க்கப்பூர் சூர்யா. கோப்புப்படம்: விஜய் டிவி

22 Apr 2019

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை