நாட்டிய அரங்கேற்றம்

திருமதி சுகந்தி குமரகுரு, திருமதி ஜெயந்தி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மாணவியான குமாரி ரூபலாவண்யா பாலசுப்பிரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் அடுத்த மாதம் 4ஆம் தேதி அரங்கேறுகிறது. ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியில் கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பயின்று பட்டயச் சான்றிதழைப் பெற்றுள்ள ரூபலாவண்யா, ‘பேலே’ போன்ற நவீன நடனங்களையும் பயின்றவர். தேசிய தின நிகழ்ச்சிகள், மீடியாகார்ப் நிகழ்ச்சிகள், சிங்கே ஊர்வலம் போன்ற வற்றிலும் இவருக்கு நடனமாடிய அனுபவம் உண்டு. அதுமட்டுமல்லாது, பெங்களூரு, புதுடெல்லி, வேலூர், திருப்பதி, பாத்தாம், சீனா, அடிலெய்ட் ஆகிய இடங்களிலும் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளில் இவர் பங்கெடுத்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பிஜிபி மண்டபத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 7.15க்கு நடைபெறும் ரூபலாவண்யாவின் பரதநாட்டிய அரங் கேற்றத்துக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற 92224257/ 97293150 ஆகிய எண்களுடன் தொடர்புகொள்ளவும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு