‘கடினமாக உழைக்கும் பெண்களே முன்மாதிரி’

வில்சன் சைலஸ்

இளமைத் துள்ளலுடன் துருதுருவென திரைப் படங்களில் தோன்றி நடிப்பது ஹன்சிகா வுக்குச் சிரமமானதல்ல என அவரை நேரில் சந்திப்பவர்கள் சட்டென்று புரிந்து கொள்வர்.

யதார்த்த பேச்சும் நகைச்சுவை உணர்வும் நிறைந்த இந்த 24 வயது திரையுலக பிரபலம், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ‘சைமா’ எனும் தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது நிகழ்ச்சியை முன்னிட்டு சிங்கப்பூருக்குக் கடந்த வியாழக்கிழமை வந்திருந்தார்.

அன்று மாலை கேம்பல் லேனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹன்சிகா, தமது திரைப்பயணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங் களையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண் டார்.

பிறந்தநாளில் தத்தெடுத்தல் கள்ளங்கபடமற்ற பேச்சு, புன்னகை ததும்பும் முகம் ஆகியவற்றால் புதிதாக அறிமுகமாகுபவர்களின் மனதிலும் எளிதில் இடம்பிடித்துவிடும் ஹன்சிகா, ஏறக்குறைய 25 ஆதரவற்ற பிள்ளைகளுக்குத் தாயாகவும் தோழியாகவும் வாழ்ந்து வருகிறார். தமது 20வது வயதில் கிட்டத்தட்ட 20 ஆதரவற்ற பிள்ளைகளைத் தத்தெடுத்த இவர், தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் குறைந்தது ஓர் ஆதரவற்ற பிள்ளையின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க முற்பட்டு வருகிறார்.

“பெரும்பாலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறுவதில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான நிலையில் இறைவன் என்னை வைத்திருக்கிறார். பிள்ளைகள் என்றால் எனக்குக் கொள்ளை இஷ்டம்,” என்ற அவர், சென்ற ஆண்டு அவர்களுடன் குளு மனாலிக்குச் சுற்றுலா மேற்கொண்டார்.

முடிந்த அளவு தமது பிள்ளைகளுடன் நேரம் செலவிட முயலும் இவர், குளு மனாலிக்குச் சென்றதில் பிள்ளைகளைவிட தாம்தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகக் கூறினார். “பிள்ளைகளைத் தத்தெடுக்கும் பண்பை என் தாயிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்,” என்றும் அவர் கூறினார். இத்துடன், மும்பை புறநகர் பகுதியில் இயற்கை வளங்கள் நிறைந்த ஓர் ஏக்கர் இடத்தில் முதியோர் இல்லம் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதையும் ஹன்சிகா பகிர்ந்து கொண்டார்.

தமது திரைப்பயணம் பற்றியும் வாழ்க்கை அனுபவங்களையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்ட ஹன்சிகா. படங்கள்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சிங்க்கப்பூர் சூர்யா. கோப்புப்படம்: விஜய் டிவி

22 Apr 2019

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை