ஹன்சிகாவுடன் ரசிகர்கள்

வில்சன் சைலஸ், திமத்தி டேவிட் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு திரையுலகப் பிரபலங்களும் ஒரே கூரையின் கீழ் சங்கமிக்கும் ஐந்தாவது சைமா விருது நிகழ்ச்சி, சிங்கப்பூரின் சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் இவ்வாண்டு பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஜூன் 30ஆம் தேதி, ஜூலை 1ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இவ்விருது நிகழ்ச்சியில் மக்கள் மனம் கவர்ந்த தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா, ஹன்சிகா, ஷ்ருதிஹாசன் ஆகியோர் பங்கேற் கவுள்ளனர்.

திரையில் மட்டும் பார்க்க முடிந்த ஹன்சிகாவை நேரில் சந்தித்து பேசுவதுடன் 'செல்ஃபி' எடுத்துக்கொள்வதற்கும் அரிய வாய்ப்பு ஒன்றை அண்மையில் ஏற்படுத்தித் தந்தது 'தமிழ் முரசு' நாளிதழ். சைமா விருது நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த சிங்கப்பூருக்குக் கடந்த 26ஆம் தேதி வந்திருந்த ஹன்சிகா, இதுவரை எத்தனை சைமா விருதுகளை வென்றுள்ளார் என்ற புதிர்ப்போட்டியைத் தமிழ் முரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடத்தியது. அந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்த பங்கேற்பாளர் களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர், அப்போலோ பிஸ்திரோ உணவ கத்தில் ஹன்சிகாவை நேரடியாக சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர்.

தமிழ்த் திரைப்பட நட்சத்திரம் ஹன்சிகாவுடன் (நடுவில்) ஃபேஸ்புக் போட்டியில் வென்றவர்கள். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!