சீனர்களுக்கும் ஆசை கிம் மோ தோசை

வில்சன் சைலஸ்

புவனா விஸ்தா எம்ஆர்டி நிலையத் திலிருந்து சுமார் 400 மீட்டர் நடை தூரத்தில் உள்ளது புளோக் 20. பல ஆண்டுகளாக அதில் செயல்பட்டு வரும் உணவங் காடியில் 'ஹெவன்ஸ்' என்ற தோசைக் கடையில் கிடைக்கிறது நாவூறும் இந்தியக் காலை உணவு. சிங்கப்பூர் முழுதும் எத்தனையோ தோசைக் கடைகள் இருந்தாலும் 'ஹெவன்ஸ்' தோசைக் கடையில் விற்கப்படும் தோசைதான் பலரது நாவிலும் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள் ளது என்பதைக் கடைக்கு முன் நிற்கும் வாடிக்கையாளர்களின் நீண்ட வரிசை பறைசாற்றுகிறது. 'சாதா' தோசை, மசாலா தோசை, அப்பம் ஆகியவற்றுடன் சிங்கப்பூரர்கள் விரும்பும் வகையில் புதுவித தோசைகளையும் அப்பங்க ளையும் தயாரித்து விற்கிறது இந்த உணவுக் கடை. ருசியான இந்தப் பதார்த்தங் களை ஒரு கை பார்க்க சனி, ஞாயிறுகளில் கடைக்கு முன் தீவெங்குமிருந்து திரண்டு வரும் கூட்டத்தில் 90 விழுக்காட்டினர் இந்தியர் அல்லாதவர்கள் என்பதுதான் ஆச்சரியம்.

'ஹெவன்ஸ்' தோசைக் கடையின் வெற்றிக்காக தளராத மனதுடன் ஒற்றுமையாக செயல்படு கின்றனர் மூன்று சகோதரிகள். அவர்களின் அயரா உழைப்பும் விடாமுயற்சியுமே ஒரு சாதாரண தோசைக் கடையாக இருந்த 'ஹெவன்ஸ்'ஐ இஸ்தானாவில் விருந்தளிக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளன. மூன்று சகோதரிகள், ஒரே கடை 'ஹெவன்ஸ்' தோசைக் கடையின் உரிமையாளர் 54 வயது திருமதி முத்துலட்சுமி வீரப்பன். கிம் மோ உணவங்காடியில் பல ஆண்டுகளாகத் தேநீர் கடை நடத்திவரும் கணவரின் மூலம் 'ஹெவன்ஸ்' தோசைக் கடை வியாபாரம் திருமதி லட்சுமிக்குக் கிடைத்தது. திருமதி லட்சுமிக்கு முன்பு அவரது கணவரின் நண்பர் அந்தத் தோசைக் கடையை வெகு நாட்களாக நடத்தி வந்தார். "தவிர்க்க முடியாத காரணங்களினால் 20 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரின் நண்பர் கடையை விற்க முடிவுசெய்தார்.

அப்போது, கிளென்ஈகல்ஸ் மருத்துவமனையில் முழுநேரத் தொலைபேசி இயக்குநராகப் பணி யாற்றிக்கொண்டிருந்த என்னிடம் கடையை வாங்கி ஒப்படைத்தார் என் கணவர்," என நினைவு கூர்ந்தார் திருமதி லட்சுமி. "முன்பின் அனுபவமின்றி எந்த நம்பிக்கையில் வியாபாரத்தை ஏற்றுக்கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை," என்ற திருமதி லட்சுமியின் தோசை வியாபாரம் இன்று அவரது கணவரின் தேநீர் கடை வருமானத்தையும் மிஞ்சிவிட்டது. 'அந்தத் தேநீர் கடைக்காரரின் மனைவிதானே நீங்கள்' என்ற வாடிக்கையாளர்கள் இப்போது 'அந்தத் தோசை கடைக்காரரின் கணவர்தானே நீங்கள்' எனத் திருமதி லட்சுமியின் கணவரை அடையாளப்படுத்துகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!