47 முறை 10ஆம் வகுப்புத் தேர்வெழுதி தோல்வியைத் தழுவிய 82 வயது பப்பு

ஜெய்ப்பூர்: 1951ஆ-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தேர்ச்சிபெற முடியாமல் போனதால் கடந்த 47 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனித்தேர்வு எழுதி, 82 வயது வரை மண வாழ்க்கையை ஒதுக்கி வாழ்ந்துவரும் ஒருவர் இந்த ஆண்டுத் தேர்விலும் தோல்வி யைத் தழுவி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப் பூர் மாவட்டத்தில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்த வர் ‌ஷிவ் சரண். உள்ளூர் மக்களால் பப்பு என்றும் ‌ஷியோஜிராம் என்றும் ஆசை ஆசையாய் அழைக்கப்படும் இவர் ஒரு வைராக்கியத்துடன் கல்யாணம் ஆகாத பிரம்மச் சாரியாக உள்ளூர் கோயில் ஒன்றில் வசித்து வருகிறார்.

"இனி பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் நமக்கு கல்யாணம், காட்சி எல்லாம்," என்ற சபதத்தில் தனது வாலிபப் பருவத்தை தொலைத்துவிட்ட பப்பு, எப்படி யாவது மீண்டும் பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். கடந்த 1969ஆ-ம் ஆண்டில் தொடங்கி இதுவரை 47 முறை தனித்தேர்வு எழுதி, இந்த ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்துள் ளார். சாகும்வரை எனது சபதத்தை நிறைவேற்ற பரிட்சை எழுதிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிவரும் இவர் தற்போது கண்பார்வை மங்கிய நிலையில் இருப்பதால் சரியாகப் படிக்க முடியாமல் இந்த ஆண்டு தேர்வில் பல பாடங்களில் சரியாகத் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும், தேர்ச்சி பெற்று விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசை மட்டும் இந்த வயதிலும் அவரது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!