இதய நோய் விழிப்புணர்வு பெண்களிடையே குறைவு

சிங்கப்பூரில் பெண்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருதய நோய் இருக்கிறது என்பதை பத்தில் ஒரு பெண்ணே அறிந்து வைத்துள்ளார். சிங்கப்பூர் இதய அறநிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 21 வயதுக்கும் 64 வயதுக்கும் உட்பட்ட 1,000 பேர் பங்கேற்றனர். இதில் 21 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தங்களுக்கு இருதய நோய் ஏற்படும் அபயாம் இருக்கிறது என்பதை நம்பவில்லை. இருதய நோய் எவருக்கும் எந்த வயதிலும் வரலாம் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். வருமுன் காப்பதே முக்கியமானது என்று கூறினார் அறநிறுவனத்தின் மருத்துவர் டாக்டர் கோ பிங் பிங்.

எனினும் ஆய்வில் பங்கேற்றவர்களில் 96% இருதய நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்துள்ளனர். 80% வாரம்தோறும் குறைந்தது சாதாரண உடற்பயிற்சி களையாவது மேற்கொள் கின்றனர். இதய நோய் ஆண்களுக்கு ஏற்படுவது என்பது தவறான எண்ணம். பெண்களும் பாதிக்கப் படுகின்றனர் என்று கல்வி மற்றும் வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019