இரண்டாம் முறையாக ‘ஸ்மார்ட்கிட்ஸ்’ விழா

வில்சன் சைலஸ்

மூன்று வய­தி­லி­ருந்து 12 வயதுக் குட்­பட்ட சிறார்­களுக்­கான விறு விறுப்­பான நிகழ்ச்­சி­களு­டன் மீண்டும் வந்­து­விட்­டது 'ஸ்மார்ட் கிட்ஸ் ஏசியா' விழா. சுகா­தா­ரம், திறன்கள், விளை­யாட்டு, கேளிக்கை, கல்வி என ஐந்து பிரி­வு­களின் கீழ் உயர்­தர கல்வி பங்கா­ளி­கள், சிறப்பு வகுப்­பு­களை நடத்­தும் அமைப்­பு­கள், பிள்ளை­கள் சார்ந்த சேவைகள் ஆகிய பல திட்­டங்களின் மூலம் பிள்ளை­கள் பய­னடை­வர். மேலும், சிறார்­களுக்­குப் பிடித்­த­மான கேலிச்­சித்­திர மாந்தர்­களு­ டன் சந்­திப்பு, விறு­வி­றுப்­பான விளை­யாட்­டு­கள், கல்வி சார்ந்த இலவச பாடங்கள், சுவா­ர­சி­ய­மான பேச்சுப் போட்டி போன்ற பிரத்­தி­யேக நிகழ்ச்­சி­களும் இந்த மூன்று நாள் விழாவில் ஏற்பாடு செய்­யப்­ பட்­டுள்­ளன.

தொலை­க்காட்­சி­யில் பிள்ளை­கள் விரும்பிப் பார்க்­கும் 'மை லிட்டில் போனி', 'ரோபோகார் போலி', 'பொரொரொ அன்ட் ஃப்­ரெண்ட்ஸ்', 'சில்­வெ­னி­யன் ஃபே­மி­லிஸ்' ஆகிய கேலி­ச்சித்­தி­ரங்களில் வரும் கதா­பாத்­தி­ரங் களை அவர்­கள் நேரில் சந்­திக்­க­ லாம். சிங்கப்­பூர் சன்டெக் மண்ட­பம் 405, 406ல் வரும் ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து 3ஆம் தேதி வரை நடை­பெ­றும் 'ஸ்மார்ட்­கிட்ஸ் ஏசியா' விழாவில் இந்தக் கேலிச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்கள் பிள்ளை­ களுக்­காக மேடை­யே­ற­வும் இருக்­கின்றன.

மேலும், முப்பதே நிமி­டங்களில் தொடக்­க­நிலை இரண்டு பயிலும் மாண­வர்­களின் ஆங்கில ஆற்றலை மேம்படுத்­து­தல், தோல் வரை­யி­யல், பிள்ளை­களின் அறி­வாற்­றலை வளர்த்தல், வயலின் வாசித்­தல் ஆகி­ய­வற்­றுக்­கான இலவச முன் மாதிரி வகுப்­பு­களுக்­குப் பெற்றோர் தங்கள் பிள்ளை­களு­டன் செல்­ல­லாம். மூன்று நாட்­களி­லும் நடை ­பெ­றும் இதுபோன்ற வெவ்வேறு முன் மாதிரி வகுப்­பு­களி­லி­ருந்து பிடித்­த­மா­ன­வற்றைப் பெற்றோர் தேர்வு செய்­து­கொள்­வதற்கு ஏதுவாக நாள் முழு­வ­தும் இந்த வகுப்­பு­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வாண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற 'ஸ்மார்ட்­கிட்ஸ் ஏசியா' விழாவில் பல சிறார்­கள் கலந்­து­கொண்டு பய­னடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு 'ஸ்பீயர் எக்­ஸி­பிட்ஸ்' அமைப்­பின் மூலம் தொடங்கப்­பட்ட இவ்விழா பெற்­றோ­ரின் ஆத­ரவை­யும் வர­வேற் பை­யும் பெற்று முதன்­முறை­யாக ஒரே ஆண்டில் இரண்டா­வது முறையாக வரும் ஜூலை மாதம் ஏற்பாடு செய்­யப்­படு­கிறது.

கருத்துப் பரி­மாற்­றம், தன்­னம்­பிக்கை, புத்­தாக்­கம் ஆகி­ய­வற் றைப் பிள்ளை­களி­டம் வளர்க்­கும் நோக்கில் 'ஸ்பீக் அப்! கிட்ஸ்' என்ற பிள்ளை­களுக்­கான முதல் தேசிய பொது பேச்சுப் போட்­டி­யும் நிகழ்ச்­சி­யில் அரங்­கே­று­வது சிறப்பு அம்­சங்களில் ஒன்று. இந்தப் போட்­டி­யில் 7 வய­தில்­இ­ருந்து 12 வய­துக்­குட்­பட்ட பிள்ளை­கள் நேர­டி­யாக மேடையில் பேசி $10,000 வரை­யி­லான பரி­சு­களை வெல்­வதற்­கான அரிய வாய்ப்பும் உள்ளது.

'ஸ்மார்ட் கிட்ஸ் ஏசியா' விழாவின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் மாதம் அரங்கேறிய கலைஞர்கள் படைத்த மேடை நிகழ்ச்சி. படம்: 'ஸ்மார்ட் கிட்ஸ் ஏசியா'

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!