பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

குஜராத் மாநிலத்தின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றான 'கிர்' வகை பசுக்களின் சிறுநீரில் தங்கம் இருக்கிறது என்று நான்காண்டு ஆய்வுகளுக்குப் பின் ஜூனாகட் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அந்தக் கல்வி நிலையத்தில் உள்ள உணவுப் பரிசோதனை ஆய்வகத்தில் 400 'கிர்' பசுக்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன. அதில், ஒரு லிட்டர் கோமியத்தில் மூன்று முதல் பத்து மில்லிகிராம் அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

தங்கம் தனிமமாக இல்லாமல் அயனி வடிவத்தில், அதாவது நீரில் கரையும் தங்க உப்புகளாக உள்ளது எனத் தெரிய வந்தது. "கோமியத்தில் தங்கம் இருப்பதாகப் பழங்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதற்குச் சான்றுகள் இல்லாத நிலையில், அது பற்றி ஆராயத் தீர்மானித்தோம்," என்றார் அந்தப் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பி ஏ கோலக்கியா. வேதிச் செயல்முறைகளின் மூலம் கோமியத்தில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டகம், எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் சிறுநீர் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றில் நுண்ணுயிர்க்கொல்லி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. 'கிர்' பசுக்களின் சிறுநீரில் சுமார் 5,100 வேதிச் சேர்மங்கள் உள்ளன என்றும் அவற்றுள் 388 சேர்மங்கள் மருத்துவ மகத்துவம் கொண்டவை என்றும் அவற்றின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும் டாக்டர் கோலக்கியா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!