சர்ஃபேஸுக்கு போட்டியாக ஆல்ஃபா

ஏசர் நிறுவனம் 'ஸ்விட்ச் ஆல்ஃபா 12' என்னும் புதிய டேப்லெட் கணினியை அறி முகம் செய்துள்ளது. 12 அங் குல அளவுள்ள இந்தக் கணினி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'சர்ஃபேஸ் புரோ 4'க்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 'சர்ஃபேஸ் புரோ 4'வுடன் ஒப்பிடும் அளவுக்கு 'ஏசர்' அதன் 'ஆல்ஃபா 12'ல் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த மாற்றங்களில் குறிப்பாக, அதனுடன் இணைந்துள்ள 'தாங்கி' அப்படியே சர்ஃபேஸ் புரோவில் உள்ளதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனை 165 டிகிரி கோணத் தில் எப்படி வேண்டுமென்றாலும் திருப்பிக் கொள்ளலாம். டேப்லெட்டும் கணினியுமாகப் பயன்படுத்தப்படும் 'டெல் எக்ஸ்பிஎஸ் 12', 'லெனோவோ மிக்ஸ் 700', 'சேம்சுங் கேலக்ஸி டேப் ப்ரோ எஸ்', 'மைக்ரேசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ' இவற்றின் வரிசையில் இப்போது 'ஏசர் ஆல்ஃபா 12'ம் இணைந்துள்ளது. டேப்லெட்டாக பயன்படும் இதனுடன் விசைப்பலகை பொருத்தினால் கணினியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணினியைப் போலவே இன்டெல் i7-6500 (2.5 GHz) இயக்க விசையைக் கொண்டது. பிக்சல்ஸ் திரைத் தரம் 2,160x1,440. ரேம் என்றழைக் கப்படும் நினைவுச் சில்லுகள் 8GB, 2 யுஎஸ்பி, மைக்ரோ எஸ்டி கார்ட் ரீடர், ஆடியோ ஜேக் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் விலை S$1899/-

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!