மற்றவருக்கு உதவுவதே மனத்துயருக்கு மருந்து

முஹம்­­­மது ஃபைரோஸ்

காலஞ்­­­சென்ற கணவர் எந்தக் கல்­­­லூ­­­ரி­­­யில் பயின்றார் என்பதை நினை­­­வு­­­கூர முடி­­­யா­­­த­­­போது சற்று தடு­­­மா­­­று­­­கிறார் அனிஸ் ஃபாத்­­­திமா, 39. "நான் அவரை மறக்க முயல்­­­கி­­­றேன்," என்று கண்ணீர் மல்கக் கூறும் இவர், "என் நண்­­­பர்­­­கள், சக ஊழி­­­யர்­­­கள் எவ்­­­வ­­­ளவோ சொல்­­­லி­­­யும் கடந்த ஏழு ஆண்­­­டு­­­க­­­ளாக என்னால் அவரை மறக்க முடி­­­ய­­­வில்லை," என்றார். திரு முஹம்­­­மது ஃபாருக், அனிஸ் ஃபாத்­­­தி­­­மாவை விட்டு மிகுந்த வேதனை தரும் விதத்­­­தில் பிரிந்ததே இவ­­­ருடைய தீராத வலிக்குக் காரணம். 2009ல் திரு ஃபாருக் புக்கிட் பாத்­­­தோக்­­­கில் உள்ள ஒரு புளோக்­­­கி­­­லி­­­ருந்து கீழே குதித்து உயிரை மாய்த்­­­துக் கொண்டார். அவ­­­ரு­­­டன் அவர்­­­களின் ஒரே பிள்ளை ஃப­­­ஹிம்மை­­­யும் கொண்டு சென்றது அனி­­­ஸுக்கு பேர­­­டியைத் தந்தது.

திரு ஃபாருக் விட்டுச் சென்ற குறிப்­­­பில், தமக்கு சுகா­­­தா­­­ரப் பிரச்­­­சினை இருந்த­­­தா­­­க­­­வும் 'ஆட்­­­டி­­­சம்' குறை பா­­­டி­­­ருந்த ஃப­­­ஹிம்மை வளர்க்­­­கும் சுமை­­­யி­­­லி­­­ருந்து மனைவியை விடு­­­விக்­­­க­­­வும் இந்த முடிவை எடுத் ­­­த­­­தா­­­கக் குறிப்­­­பி­­­டப்பட்­­­டி­­­ருந்தது. அந்த அசம்பா­­­வி­­­தம் அனி­­­ஸுடைய வாழ்க்கையைப் பெரிதும் பாதித்­­­தது. அவ­­­ருடைய இறைப்­­­பற்­­­றும் அவரின் அன்­­­புக்­­­கு­­­ரி­­­ய­­­வர்­­­கள் அளித்த பேரா­­­த­­­ர­­­வும் நீங்கா துன்­­­பத்­­­தி­­­லி­­­ருந்து அனிஸ் மீண்டுவர உதவி­­­யது. அதற்கு ஆறு ஆண்­­­டு­­­கள் பிடித்­­­தன. தம்­­­முடைய ஆழ்ந்த துன்­­­பத்திலிருந்து விடுபடும் உபாய மாக மற்­­­ற­­­வர்­­­களுக்கு உதவி வரும் இவர், 'கிளப் ஹீல்' எனும் அற­­­நி­­­று­­­வ­­­னத்­­­தில் மதி­­­யா­­­லோ­­­ச­­­க­­­ரா­­­கப் பணி­­­யாற்­­­று ­­­கிறார். மன நோயினால் அவ­­­தி­­­யு­­­று­­­ப­­­வர்­­­களுக்கு மறு­­­வாழ்வு, ஆலோ­­­சனைச் சேவைகளை 'கிளப் ஹீல்' அறநிறுவனம் வழங்­­­கு­­­கிறது.

ஆங்கில இலக்­­­கி­­­யத்­­­தில் பட்டம் பெற்ற அனிஸ், தமிழ்­­­நாடு தக்கலை நகரில் மூன்று பிள்ளை­­­களில் இளை­­­ய­­­வ­­­ரா­­­கப் பிறந்த­­­வர். காலஞ்­­­சென்ற தந்தை பொதுச் சேவை ஊழி­­­ய­­­ராக இருந்தார். தாய் இல்­­­லத்­­­த­­­ர­­­சி­­­யாக உள்ளார். முது­­­கலைப் பட்டக் கல்வியை முடித்­­­த ­­­வு­­­டன் பொருத்­­­த­­­மான மாப்­­­பிள்ளையைத் தேடும் முயற்சி பல­­­ன­­­ளிக்­­­கா­­­த­­­தால் அனிஸ் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வில் சிறப்­­­பா­­­கத் தேறி திரு­­­வி­­­தாங்­­­கோட்­­­டில் முஸ்லிம் கலைக் கல்­­­லூ­­­ரி­­­யில் விரி­­­வுரை­­­யா­­­ளர் பணியில் சேர்ந்தார்.

ஆனால், ஆறு மாதங்களில் இவர் பணியைக் கைவிட நேர்ந்தது. காரணம், குடும்ப நண்பர் ஒரு­­­வ­­­ரின் மூலம் பொருத்­­­த­­­மான மாப்­­­பிள்ளை கிடைத்­­­து­­­விட்­­­டார். அனி­­­ஸுடைய அக்­­­கா­­­வும் மச்­­­சா­­­னும் 400 கிலோ­­­மீட்­­­ட­­­ருக்கு அப்பால் உள்ள ஜக­­­தாப்­­­பட்­­­டி­­­னத்­­­துக்குச் சென்று திரு ஃபா­­­ருக்கை நேரில் சந்­­­தித்து விசா­­­ரித்­­­த­­­னர். அப்போது அவர் சிங்கப்­­­பூ­­­ரில் 'சீகேட்' நிறு­­­வ­­­னத்­­­தில் மென்­­­பொ­­­ருள் பொறி­­­யா­­­ள­­­ரா­­­கப் பணி­­­யாற்­­­றிக் கொண்­­­டி­­­ருந்தார். திரு­­­ம­­­ணம் ஒரு வாரத்­­­தில் நிச்­­­ச­­­யிக்­­­கப்­­­பட்ட நிலையில் 2001ல் அன்பர் தினத்­­­தன்று அது நடந்தது. 2002ஆம் ஆண்டு ஏப்ரலில் ஃபஹிம்மை ஈன்றெடுத்தார் அனிஸ்.

ஆரம்பத்­­­தில் ஃப­­­ஹிம்­­­முக்கு எந்தப் பிரச்­­­சினை­­­யும் இல்­­­லா­­­வி­­­டி­­­லும் பின்னர் அவ­­­ருக்கு 'ஆட்­­­டி­­­சம்' குறைபாடு இருந்த­­­தாகத் தெரிய வந்தது. பள்­­­ளி­­­யில் அவ­­­ருடைய து­­­ரு ­­­து­­­ரு­­­த்தல் மிக்க நடத்தை­­­யால் ஆசி­­­ரி­­­யர்­­­கள், மாண­­­வர்­­­களி­­­ட­­­ம் இ­­­ருந்து புகார்­­­கள் வந்தன. ஒரு கட்­­­டத்­­­திற்குப் பிறகு ஃப­­­ஹிம்­­­மின் நட­­­வ­­­டிக்கை­­­களைப் பொறுக்க முடி­­­யா­­­த­­­தால் பள்ளியை விட்டு நிறுத்­­­திக் கொள்ளும் படி பள்ளி நிர்­­­வா­­­கம் தெரி­­­வித்­­­தது. சில நாட்­­­கள் கழித்து ஒரு வெள்­­­ளிக்­­­கிழமை­­­யன்று, கவலை­­­யு­­­டன் இருந்த அனி­­­ஸுக்கு ஆறுதல் கூறி­­­விட்டு ஃப­­­ஹிம்மை வெளியே அழைத்­­­துச் செல்­­­வ­­­தா­­­கக் கூறினார் ஃபாரூக். வெகுநேர­­­மா­­­கி­­­யும் கண­­­வ­­­ரும் மகனும் வீடு திரும்பா­­­ம­­­லும் தொலைபேசி மூலம் தொடர்­­­பு­­­கொள்ள முடி­­­யா­­­மலும் போகவே, தேடிச் சென்ற­­­ அனிஸுக்கு அவர்­­­களுடைய விபரீத முடிவு தெரியவந்தது.

இதற்­­­கிடையே இந்­­­தி­­­யா­­­வுக்­­­குத் திரும்பி குடும்பத்­­­து­­­டன் இரு ஆண்­­­டு­­­கள் செல­­­விட்ட அனி­­­ஸுக்கு குடும்பத்­­­தின் அன்பு, ஆத­­­ர­­­வு­­­டன் இறைப்­­­பற்­­­றும் அவரைக் காப்­­­பாற்­­­றின. 2013ல் சிங்கப்­­­பூர் திரும்­­­பிய அவர், சமய வகுப்­­­பு­­­களுக்­­­குச் சென்று தொண்­­­டூ­­­ழி­­­யத்­­­தி­­­லும் ஈடு­­­பட்­­­டார். அங்கு கிடைத்த நல்ல நண்பர் ஒரு­­­வ­­­ரி­­­டம் தம் கதையைச் சொல்ல 'கிளப் ஹீல்' அற­­­நி­­­று­­­வ­­­னத்­­­தில் சேரும் வாய்ப்புப் பெற்றார். அங்கு ஆலோசகர் பயிற்சி பெற்று இப்போது முழுநேர மதி ஆ­­­லோ­­­ச­­­க­­­ரா­­­கப் பணி­­­பு­­­ரி­­­கிறார் அனிஸ்.

நோன்புப் பெரு­­­நாளைக் கணவர், மக­­­னு­­­டன் மகிழ்ச்­­­சி­­­யு­­­டன் கொண்டா­­­டிய கால ­­­கட்­­­டம் அனி­­­ஸுக்கு முன்பு இருந்தது. ஆனால் இப்போது இங்கு தனியாக வாழும் இவ­­­ருக்கு நோன்புப் பெருநாள் தினத்­­­தன்று இந்­­­தி­­­யா­­­வி­­­லுள்ள தம் குடும்பத்­­­து­­­டன் ஒன்­­­றிணை­­­வதே மன­­­நிறைவு தரு­­­கிறது. "கடந்த சில ஆண்­­­டு­­­க­­­ளாக நோன்புப் பெருநாளை இங்கு கழித்­­­துள்­­­ளேன். அப்போது பெருநாள் தொழுகையை நிறை­­­வேற்றி, உணவுப் பதார்த்­­­தங்களை அண்டை­­­வீட்­­­டா­­­ரு­­­டன் பகிர்ந்­­­து­­­கொண்­­­டேன்," என்ற இவர், இந்தியாவுக்குச் சென்று சொந்த பந்தங்களு­­­டன் நல்ல நாளைக் கழிக்க ஆவ­­­லு­­­டன் இருப்பதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!