விற்பனைக்கு வந்தது இந்தியாவின் குறைந்த விலை நவீன கைத்தொலைபேசி

புதுடெல்லி: உலகிலேயே மிகக்குறைந்த விலையாக 251 ரூபாய்க்கு 'ஸ்மார்ட் போன்' விற்பனை செய்யவிருப்பதாக இந்தியாவின் 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி அந்நிறுவனம் குறைந்த விலை நவீன கைத்தொலைபேசியை நேற்று விற்பனைக்கு விட்டது. இதற்காக 30,000 பேர் முன் பதிவுசெய்துள்ளனர். இந்த குறைந்த விலை நவீன கைத்தொலைபேசிக்கு 'ப்ரீடம் 251' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்தவர்களில் முதல் கட்டமாக 5,000 பேருக்கு நேற்று கைத்தொலைபேசி விநியோகிக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் மொகிட் கோயெல் தெரிவித்தார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 'ப்ரீடம் 251' கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் திரு மொகிட் கூறினார். இந்தக் கைத்தொலைபேசியைத் தயாரிக்க ரூ.1,250 முதல் ரூ.1,400 வரை செலவானாலும் விற்பனை விலை ரூ.251 தான் என்கிறார் அந்நிறுவனத்தின் தலைவர் அசோக் சாதா. இந்த விலையில் தயாரிப்புக்கு ஆகும் செலவை எவ்வாறு சரிக் கட்டுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு சாதா, "அந்தக் கைத்தொலைபேசியில் ஏற்கெனவே பதியப்பட்ட ஆப்ஸ் வாயிலாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தயாரிப்புச் செலவை ஈடுகட்ட முடியும்," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!