நகங்களில் அழகுக் கலை

கை, கால் விரல்களுக்கு மருதாணி இட்டுக் கொள்ளும் தமிழர்களின் இயற்கை முறைதான் இன்றைய காலக் கட்டத்தில் 'நெயில் ஆர்ட்' என்ற நாகரிகமாக மாறியுள்ளது. நகங்களுக்குச் சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். முந்தைய காலங்களில், பண்டிகை நேரங்களிலும் விஷேச நேரங்களிலும் பெண்கள் மருதாணி இட்டுக் கொள் வது பழக்கம். சில வீடுகளில் ஆண் களும் மருதாணி இட்டுக் கொள்வர். அரைத்த மருதாணி இலையை முதல் நாள் இரவு கை, கால்களில் இட்டுக் கொள்ள, மறுநாள் காலை மனதை மயக்கும் சிவப்பு நிறம் நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் வசீகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல், உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் பித்தத்தைக் குறைக்கும்.

இவ்வாறு ஆரோக்கியம் தரும் மருதாணியால் அழகுப்படுத்திக் கொண்ட இயற்கை முறை தற்போது மெஹந்தி, நெயில் பாலிஷ் என்னும் நகப்பூச்சாக மாறி பெண்களை அழகுப்படுத்துகிறது. பல வண்ணங்களில் கிடைக்கும் நகப்பூச்சுகளைக் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் நகங்கள் அழகு செய்யப்படுகின்றன. வி-ஷேசங்களுக்கு ஏற்ற வடிவமைப்பிலும் ஆடைகளுக்கேற்ற வடிவமைப்பிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நகங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது பெண்களையும் பெரிதும் கவர்ந்து வரும் இந்த அழகுக் கலைக்காக பிரத்யேக நக அழகு நிலை யங்களும் பெரு நகரங்களில் வேகமாக பெருகி வருகின்றன. ஆனால், எளிய வடிவமைப்புகள் மூலம், வீட்டிலேயே நமது நகங்களை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் சுலபமாகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!