என்யுஎஸ் பட்டமளிப்பு: 42 வயதில் சாதனை

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இளமைப் பரு­வத்­தில் படிப்­பில் அவ்­வ­ளவு ஆர்­வ­மில்­லா­மல் இருந்தார் திரு சி. ஞான­சே­கர். பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் படிப்பை நிறுத்­தி­விட்டு 18 வய­தில் சிங்கப்­பூர்க் குடி­ய­ரசு கடற்­படை­யில் சேர்ந்தார் அவர். பல ஆண்­டு­கள் கழித்து, கல்­வி­யின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து சிங்கப்­பூர்க் கடற்­படை­யின் உப­கா­ரச் சம்ப­ளத்­தில் பட்­ட­யக்­கல்­வியை 2005ஆம் ஆண்­டில் முடித்­தார். அதில் சிறப்­பா­கத் தேர்ச்சி பெற்­ற­தால் அவ­ருக்கு தங்கப் பதக்­க­மும் வழங்கப்­பட்­டது. 2012ஆம் ஆண்­டில், இவ­ருக்கு 38 வயது.

இரு பிள்ளை­களுக்குத் தந்தை­யான இவ­ருக்கு, நிலை­யான வேலைச் சூழல் இருந்தா­லும் மன­தில் ஒரு­வித திருப்தி இல்­லா­மல் இருந்தது. ஆரம்ப காலத்­தில் இடை ­யி­லேயே விட்ட படிப்பு, செய்­யும் பணி­யில் தொழில்­நுட்ப அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்ற வேட்கை, பள்ளி செல்­லும் பிள்ளை­களுக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக விளங்க வேண்­டும் என்ற கார­ணம் ஆகி­யவை இவரை மீண்­டும் கல்­விப் பய­ணத்தைத் தொட­ரத் தூண்­டின. அதன்­படி அவர் 2012ஆம் ஆண்­டில் சிங்கப்­பூர் குடி­ய­ரசு கடற்­படை­யின் உப­கா­ரச் சம்ப­ளத்­தில் முழு நேர­மாக சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழக மின்­னி­யல் பொறியியல் துறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!