உயிர் காக்கும் உயரிய தானம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சுமார் 39 ஆண்­டு­களுக்கு முன் கருப்பை பிரச்­சினை­யால் பாதிக்­கப்­பட்ட திரு நந்த­கு­மார் கேபி­ரி­ய­லின் தாயாரது உயிரைக் காப்­பாற்ற உட­ன­டி­யாக ரத்தம் தேவைப்­பட்­டது. அப்போது திரு கேபி­ரி­ய­லுக்கு 14 வய­தி­ருக்­கும். "அன்று ரத்த தானத்தைப் பற்றி கேட்பது அரிது. ஆனாலும் அம்­மா­வின் உயிரைக் காப்­பாற்ற ஐந்து பேர் ரத்தம் கொடுக்க முன்­வந்த­னர்," என அச்­சம்ப­வத்தை நினை­வு­கூர்ந்தார் திரு கேபி­ரி­யல். தக்க சம­யத்­தில் கிடைத்த ரத்த தானத்­தால் அம்மா உயிர் பிழைத்­தார் என்பதை உணர்ந்த திரு கேபி­ரி­யல், பிற­ருக்­கும் இந்த உதவி கிடைக்க வேண்டும் என நினைத்­தார். 18 வய­தி­லி­ருந்து ரத்த தானம் செய்ய ஆரம்­பித்­தார்.

இன்­று­வரை இவர் 160 தடவை­கள் ரத்த தானம் செய்­தி­ருக்­கிறார். இவ­ரு­டன் இவரது மனைவி, மகன், இரு மகள்­கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ரத்த தானம் செய்து வருகின்றனர்.

நிதி ஆலோ­ச­க­ராக பணி­யாற்­றும் 53 வயது திரு கேபி­ரி­யல் ரத்த தானத்தைப் பற்றிப் பேசி னாலே மக்­களி­டம் ஒருவித பயம் ஏற்­படு­கிறது என்றார். ஊசி பயம், ஆரோக்­கி­யம் பாதிப்­படை­யும், ரத்தம் கொடுத்­தால் உடல் பரு­மனா­கும் என்ற பல அச்சங்கள் மக்­களி­டம் உள் ளன என்றார் திரு கேபி­ரி­யல்.

நல்ல ஆரோக்­கி­யம் இருந்தால்­ தான் ரத்த தானம் செய்ய முடியும். ஆதலால் அடிக்­கடி ரத்தம் கொடுப்­பது நல்ல ஆரோக்­கி­யத்­திற்கு சான்­றி­தழ் என்பது இவர் கருத்து. வாரத்­தில் இருமுறை பூப்­பந்து விளை­யாட்­டில் ஈடு­படும் திரு கேபி­ரி­யல் ரத்த தானம் எந்தவி­தத்­தி­லும் தனது ஆரோக்­கி­யத்தைப் பாதித்­த­தில்லை என்றும் ஆரோக்­கி­யத்தைப் பேணிக் காக்க இது ஒரு பரி­சோ­தனை போன்று இருக்­கிறது என்றும் விவ­ரித்­தார். முன்பு சிங்கப்­பூர் பொது மருத்­து­வ­மனை­யில் நேரான படுக்கை­ யில் இருந்த­வாறு ரத்தம் கொடுத்­த­தையும் அது ஒரு 'போத்­த­லில்' சேக­ரிக்­கப்­பட்­டதை­யும் நினை­வு­கூர்ந்த திரு கேபி­ரி­யல், இப்போது ரத்த தானம் செய்வது எளிமை ­யா­கி­விட்­ட­தென்றார்.

இன்று ரத்தம் சேக­ரிக்க அதி­ ந­வீன கரு­வி­கள் பயன்­படுத்­தப்­படு கின்றன. குளிர்­சாதன வச­தி­யு­டன் தொலைக்­காட்­சி­யில் நிகழ்ச்­சியைப் பார்த்­த­வாறு ரத்தம் கொடுக்க முடி­கின்றது. ரத்த தானம் செய்­ப­வர் ­களை நன்கு கவ­னித்து அவர்­களின் தேவைகளை பூர்த்தி செய்­ வ­தில் கவனம் செலுத்­தப்­படு­கிறது என்று கேபி­ரி­யல் விளக்­கினார். 'தேவைப்­பட்­டால் ரத்தம் கொடுக்க யாராவது முன்­வ­ரு­வர்' என்ற எண்ணம் பர­வ­லாக இருக்­கிறது. ஆனால் அப்படித் தேவைப்­ படும்­போது ரத்தம் கிடைக்­கா­விட்­டால் பிறரைக் குறை­கூ­று­வது சரி­யல்ல," என்றார் திரு கேபிரியல். மக்­களிடையே ரத்த தானம் குறித்த மனப்­போக்கு மாற வேண்டும். சிறு­வ­ய­திலேயே இந்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தினால்­தான் நிலைமை மாறும் என்பது கேபி­ரி­யலின் நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!