எழுத்தார்வத்தை வளர்க்கும் பரிசு

முதல் முதலாக வெளி­யிட்ட இரு நூல்­களுமே சிங்கப்­பூர் இலக்­கி­யப் பரிசை வென்றது எழுத் தாளர் சித்­து­ராஜ் பொன்­ரா­ஜுக்கு மகிழ்ச்­சி­யு­டன், ஆர்­வத்தை­யும் பயத்தை­யும் தந்­துள்­ளது. "இந்தப் பரிசு ஒரு வாசல். தெரியாத இடத்­துக்கு ஒரு வாசல் திறக்­கும்­போது சந்­தோ­ஷ­மாக இருக்­கிறது. அதே­நே­ரத்­தில் அந்த வாச­லுக்­குள் என்ன இருக்­கும் என்ற ஆர்­வ­மும் பயமும் அக்கறை யும் சரியாக பயணம் செய்ய வேண் டுமே என்ற கவ­ன­மும் ஏற்­படு­கின் றன," என்றார் திரு சித்­து­ராஜ்.

இவரது 'மாறி­லி­கள்' சிறு கதைத் தொகுப்பு புதினம் தமிழ் பிரிவில் $10,000 பரிசை வென்றது. 'காற்றாய் கடந்தாய்' கவிதைத் தொகுப்பு கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசை வென்றது. "40 வயது இளையர் இரு பரி­சு­களை வாங்­கி­யது மகிழ்ச்சியாக இருக்­கிறது," என்ற மற்றொரு விரு­தா­ள­ரான அ.கி.வர­த­ரா­சன், "பெரிய தொகையைப் பரி­சா­கக் கொடுக்­கிறார்­கள். இது பலரை எழுத ஊக்­கு­விக்­கும்," என்றார்.

சிங்கப்­பூ­ரில் தமிழ் இலக்­கி­யத் துக்கு வழங்கப்­படும் வாய்ப்­பு­களும் ஆத­ர­வும் தொடர்ந்து எழுதும் ஆர்­வத்தை வளர்ப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் இந்த ஆண்டு இரு பரி­சு­களை வென்ற மற்றொரு படைப்­பா­ள­ரான அ.கி.வர­த­ரா­சன். கவிதை பிரிவில் தகுதிப் பரிசை வென்ற 'சிங்கப்­பூர் நான்மணி மாலை' சிங்கப்­பூ­ரின் பெருமை­களைப் பேசும் நோக்கில் ஆர்­வத்­தோடு இவர் எழுதிய நூல். சிங்கைத் தாய்க்கு நிறைய பூக்­களைச் சூடு­வ­து­போல் வெண்பா, கட்­டளைக்­ க­லித்­துறை, ஆசி­ரி­யப்பா, அக­வல்பா என நிறைய பா வகை­களைக் கொண்டு இந்நூலை அவர் இயற்­றி­யுள்­ளார்.

புதினம் அல்­லா­தவைக்­கான தமிழ்ப் பிரிவில் பாராட்­டுப் பரிசை வென்ற இவரின் 'கம்பன் காட்டும் கணைகள்' சென்னைக் கம்பன் கழ­கத்­தின் இந்த ஆண்­டுக்­கான ஆ.ச.ஞான­சம்பந்தன் நினைவுப் பரிசை­யும் வென்­றுள்­ளது.

பள்­ளிக்­கூ­டத்­தில் ஆசி­ரி­யர் களும் சிங்கப்­பூ­ரில் இலக்­கிய வட்­ட­மும் தமது இலக்­கிய ஆர்வத்தை வளர்த்து ஆழப்­படுத்­தியதாகக் கூறிய இவர், சிங்கப்­பூ­ரில் பல இலக்­கி­யக் குழுக்­கள் வெவ்வேறு தளங்களில் இயங்­கு­வதை ஆக்­க­க­ர­மா­ன­தா­கப் பார்க்­கிறார். சிறு சிறு குழுக்­களின் சுய­வெ­ளிப்பாடு இலக்­கி­யத்­தில் தனித்துவத்தை­யும் பன்­மு­கத்­தன்மையையும் வளர்க்கி றது என்றார் அவர். அனு­ப­வ­மிக்க மூத்த வானொலிப் படைப்­பா­ளர்களில் ஒரு­வ­ரான திரு செ.ப. பன்­னீர்­செல்­வம், வெளி­வந்த நூல் களுக்கு வழங்கப்­படும் இலக்­கி­யப் பரிசு பரந்­து­பட்ட படைப்­பாக்­கத்தை வளர்ப்­ப­தா­கத் தெரி­வித்­தார். சிங்கப்­பூ­ரின் தமிழ் முன்­னோ­டி­கள் குறித்து அடுத்த தலை­முறை­ யி­னர் தெரிந்­து­கொள்­வது முக்­கி­யம் என்ற நோக்கில் இவர் எழுதிய 'சிங்கப்­பூர் தமிழ் முன்­னோ­டி­கள்' சிங்கப்­பூர் இலக்­கி­யப் பரிசில் புதினம் அல்லாத பிரிவில் (தமிழ்) பாராட்­டுப் பரிசு பெற்ற நான்கு நூல்­களில் ஒன்று.

விருதுகளை வென்ற படைப்பாளர்கள் (இடமிருந்து வலம்) ஷாநவாஸ், செ.ப. பன்னீர்செல்வம், அ.கி.வரதராசன், கோட்டி திருமுருகானந்தம். வலது படம் - சித்­து­ராஜ் பொன்­ராஜ். படங்கள்: கோ பெங் சை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!