கொரியா, தமிழர்களின் கலாசார பிணைப்பு

சென்னை­யி­லுள்ள கொரிய குடி­ய­ரசின் முதன்மை தூதர் திரு.யூம் சூ கிம் அவர்­கள் தமி­ழ­கத்­திற்­கும் கொரி­யா­வுக்­கும் மொழி, கலா­சா­ர தொடர்­பு­கள் இருப்­பதைத் தன் ஆராய்ச்­சி­யின் வாயிலாக சுட்­டிக்காட்டியுள்ளார். இது­பற்றி விரைவில் நடைபெற வுள்ள 'மெட்ராஸ் வீக்' என்ற நிகழ்ச்­சி­யில் பகிர்ந்­து­கொள்­ள­ வுள்­ளார். ஏறத்­தாழ நாலா­யி­ரம் கொரிய சொற்கள் தமிழ்ச் சொற்­களு­டன் தொடர்பு கொண்­டி­ருப்­ப­தாக அவர் கூறினார். வணக்கம், நாள், மனைவி, அவதிப்படு போன்ற தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழர்களைப்போல் கொரியர்களும் காலணிகளை வீட்டிற்கு வெளியேவிட்டுச் செல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்றும் அவர் கூறுகிறார். கொரி­யா­வின் முதல் அரசி இந்­தி­யா­வி­லி­ருந்து அதிலும் தமிழ்­நாட்­டி­லி­ருந்து சென்ற­வள் என்று சொல்லப்படு­வ­தா­கக் கூறி னார். அப்போது அவர் இங்கிருந்து கல் ஒன்றைக் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அது இங்குள்ள 'இளவட்டக்கல்' போன்றது எனக் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கொரிய தூதர் முதன்­மு­த­லா­கத் தமிழகப் பெண்­களைப் பார்த்தபோது முற்­கா­லத்­து கொரிய பெண்­களைப் பார்ப்­பது போல உணர்­ந்ததாகவும் குறிப்பிட்­டுள்­ளார். கொரி­யா­வுக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் பண்பாடு, வரலாறு, மொழி, தொழில் தொடர்­பு­களைப் பெருக்­கு­வ­தில் தாம் ஆதரவு காட்­டு­வ­தாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!